சிம்புவுடன் ஜோடி சேரும் நடிகை.. 14 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி

Actor Simbu : சிம்பு இப்போது பழைய விஷயங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு தன்னுடைய படத்திற்காக கடுமையாக ஒர்க்அவுட் செய்து வருகிறார். தனது உடம்பையும் குறைத்து மெருகேற்றி இருக்கிறார்.

இந்நிலையில் கமலின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ள நிலையில், கமலுடன் சேர்ந்தே தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

துல்கர் சல்மான், ஜெயம் ரவி, கௌதம் கார்த்திக் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கமல் சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக செயல்பட்டு வந்து கொண்டிருந்தார்.

14 வருடங்களுக்குப் பிறகு சிம்பு படத்தில் நடிக்கும் திரிஷா

ஆகையால் கமல் இல்லாத காட்சிகளை மணிரத்னம் படப்பிடிப்பு நடத்தி வந்தார். மேலும் இந்த படத்தில் திரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சிம்புவுக்கு ஜோடியாக தான் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சிம்பு மற்றும் திரிஷா இருவரும் இணைந்து விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றிருந்தது.

இப்போது 14 வருடத்திற்கு பிறகு மீண்டும் தக் லைப் படத்தில் சிம்பு மற்றும் திரிஷா இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்