வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மூளையை தின்னும் அமீபாவால் 14 வயது சிறுவன் மரணம்.. கேரளாவில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம்

Naegleria Fowleri: எந்த நேரத்தில் என்ன நடக்குது என்று யூகிக்க முடியாத அளவிற்கு தான் ஒவ்வொரு நொடியும் கடந்து கொண்டிருக்கிறோம். தடுக்கி விழுந்த நேரத்தில் உயிர் போன பரிதாபமும், விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த ஆச்சரியமும் நடந்திருக்கிறது. இப்படி அடுத்த நொடியில் என்ன நடக்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்று தெரியாத அளவிற்கு தான் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதில் அவ்வப்போது ஏதாவது நோய், வைரஸ் போன்ற விஷயங்கள் தாக்கப்பட்டு எங்கேயோ ஒரு இடத்தில் மரணங்கள் போய்க் கொண்டிருக்கிறது. அப்படித்தான் இப்பொழுது ஒரு விஷயம் ரொம்பவே அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவிற்கு சம்பவத்தை உண்டாக்கியிருக்கிறது.

தொற்று நோயால் உயிர் போன சம்பவம்

அதாவது மூளையே உண்ணும் அமீபாவால் கேரளாவை சேர்ந்த 14 வயது சிறுவன் பலியாய் இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்றால் நெக்லெரியா ஃபோவ்லெரி என்கிற அமீபா தான். இதைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பாக பார்க்கலாம்.

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது அசுத்தமான நீரில் காணப்படும். இது சுதந்திரமாக வாழும் அமீபாவால் ஏற்படும் ஒரு அரிய மற்றும் பெரும்பாலும் ஆபத்தான மூளை தொற்று ஆகும். இந்த சம்பவம் மே மாதத்திற்குப் பிறகு கேரளாவில் இதுபோன்ற மூன்றாவது மரணத்தைக் குறிக்கிறது. கேரளாவில் ஜூன் மூன்றாம் தேதி 14 வயது சிறுவன் அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்றுக்கு பலியாய் இருக்கிறார்.

கேரளாவில் இதுபோன்று கடந்த இரண்டு மாதங்களில் மூளையை தின்னும் அமீபாவால் இரண்டு பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள் என்று மருத்துவ துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். கேரளாவில் கோழிகூட்டை சேர்ந்த இந்த சிறுவன் கடுமையான தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார். பின்பு ஜூன் 24ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கு என்ன காரணம் என்று தெரிந்த நிலையில் அவருடைய வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஓடையில் குளித்த போது தொற்று ஏற்பட்டதாக சந்தேகம் வந்திருக்கிறது. இந்த ஒற்றை செல் உயிரினத்தில் இருந்து வரும் தொற்று பெரும்பாலும் உயிருக்கு ஆபத்தாகவே இருக்கும். அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸின் அறிகுறிகள் வெளிப்பட்ட இரண்டு முதல் 15 நாட்களுக்குள் தெரியவரும்.

இந்த பாக்டீரியா அல்லது வைரஸ் மூளைக்காய்ச்சலுடன் நெருக்கமாக போவதால் உடனே உயிரை கொள்ளும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்படி இந்த அமீபா சூடான ஏரிகள், ஆறுகள், மற்றும் சூடான நீரூற்றுகளில் செழித்து வளர்கிறது. சில சந்தர்ப்பங்களில் இது மோசமாக பராமரிக்கப்படும் நீச்சல் குளங்களிலும் காணப்படுகிறதாக கூறியிருக்கிறார்கள்.

நெக்லேரியா ஃபோவ்லெரி மூக்கு வழியாக உடலில் நுழையும்போது இந்த தொற்று பரவுகிறது. ஏனென்றால், மூளையைத் தின்னும் அமீபா நாசி குழிக்கு அருகில் அமைந்துள்ள ஆல்ஃபாக்டரி நரம்பு வழியாக மூளையை எளிதாக செல்ல முடியும். அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆரோக்கியமாக இருக்க சில குறிப்புகள்

- Advertisement -

Trending News