1. Home
  2. கோலிவுட்

டிடிஎஃப் வாசனுக்கு ஜோடி போட்டு வளர்வதற்கு முன்னரே வீணா போன ஹீரோயின்.. வாங்குன பெயர் எல்லாம் வீண்

டிடிஎஃப் வாசனுக்கு ஜோடி போட்டு வளர்வதற்கு முன்னரே வீணா போன ஹீரோயின்.. வாங்குன பெயர் எல்லாம் வீண்
பல வழக்குகளில் சிக்கியுள்ள டிடிஎஃப் வாசன் கண்ணகி படங்களில் நடித்த நாயகி ஷாலின் சோயாவுடன் தற்போது மஞ்சள் வீரன் என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோ ஆக அறிமுகம் ஆகிறார்

Famous Youtuber TTF vasan's upcoming film and his love story: இரு சக்கர வாகனங்களின் மூலம் வித்தை செய்து அதை யூடியூபில் பதிவிட்டு பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். ஆர்வக்கோளாறு காரணமாக  பைக்கில் சாகசம் செய்து காவல் துறையிடம் மாட்டி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இந்த முரட்டு சிங்கத்திற்கு வாடிக்கையான ஒன்று.

அதிவேகமாக பைக் ஓட்டி வீலிங் செய்து 2கே கிட்ஸை கவர்ந்த இந்த  இளைஞருக்கு ரசிகர் பட்டாளமும் ஏராளம். ஒரு முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டி சாலைகளின்  தடுப்பில் இடித்து கை உடைந்த  நிலையில் காவல்துறையிடம் மாட்டிக் கொண்ட இந்த கட்டத்துரையை நீதிபதி எச்சரித்ததோடு மட்டுமல்லாமல் பைக் லைசென்ஸ்யும் கேன்சல் செய்து 10 வருடம் பைக் ஓட்ட தடையும் செய்தார்.

பல வழக்குகளில் சிக்கியுள்ள டிடிஎஃப் வாசன் தற்போது மஞ்சள் வீரன் என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோ ஆக அறிமுகம் ஆகிறார். இப்படத்திற்காக நடிப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்க மஞ்சள் வீரனுடன் நிஜ வாழ்க்கையில் ஜோடி போட்டு சுற்றி வரும் ஹீரோயின் யார் தெரியுமா?

ராஜா மந்திரி மற்றும் கண்ணகி படங்களில் நடித்த நாயகி ஷாலின் சோயா தான். குறும்படங்களை இயக்கியதன் மூலம் தன்னை சிறந்த டைரக்டர் ஆக நிரூபித்துக் கொண்ட  கேரளத்து பைங்கிளி ஷாலின் சோயா தமிழ் படத்தில் தான் முதன் முதலில் நடிப்பேன் என்று ராஜா மந்திரியின் மூலம் தமிழில் அறிமுகமானார் .

சமீபத்தில் வெளியான கண்ணகி படத்தில் இவர் ஏற்றிருந்த நேத்ரா கதாபாத்திரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. தனது திறமையான நடிப்பின் மூலம் இன்னும் உயரத்தை எட்ட இருந்த நிலையில்  மஞ்சள் வீரனிடம் மாட்டிக் கொண்ட இந்த மைனாவை நினைத்து ஷாலின் ஆதரவாளர்கள் பலரும் கதறுகின்றனர்.

எதையும் கண்டுகொள்ளாது இருக்கும் இந்த ஜோடிகள் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகின்றனர். நிதானம் பிரதானமாக இருந்தால் சரிதான்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.