1. Home
  2. கோலிவுட்

தளபதி 68-ல் மறுபடியும் ஒரு ஹீரோயினை களம் இறக்கிய வெங்கட் பிரபு.. இவானாவிற்கு பதிலாக வரும் அமுல் பேபி

தளபதி 68-ல் மறுபடியும் ஒரு ஹீரோயினை களம் இறக்கிய வெங்கட் பிரபு.. இவானாவிற்கு பதிலாக வரும் அமுல் பேபி
அடுக்கடுக்காக ஹீரோன்களை தளபதி 68 படத்தில் இணைக்கும் வெங்கட் பிரபு.

Vijay in Thalapathy 68: தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் உச்ச நட்சத்திரங்களாக இருந்தாலும் விஜய்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதற்கு காரணம் அவருடைய நடிப்பு, ஸ்டைலு, ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஈர்ப்பு தன்மை. அதனாலயே வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் வாரிசு மற்றும் லியோ படங்களில் நடித்து வசூல் அளவில் ஆட்ட நாயகனாக ஜெயித்து விட்டார்.

இதே மாதிரி அடுத்த ஆண்டும் இரண்டு படங்களை ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு கூட்டணியில் நடித்து வருகிறார். இதனை எடுத்து தளபதி 69 படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக பேச்சு வார்த்தை அடிபட்டு வருகிறது. இதற்கிடையில் வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்பதை ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தில் ஏகப்பட்ட பிரபலங்களின் பட்டாளத்தை வெங்கட் பிரபு களம் இறக்கி இருக்கிறார். ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா போன்ற முன்னணி நடிகைகள் இருக்கும் பட்சத்தில் மறுபடியும் ஒரு ஹீரோயினை தளபதி 68 படத்திற்காக கொண்டு வந்திருக்கிறார். அவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் என்ற படத்தில் ஜீவாக்கு ஜோடியாக நடித்தவர் மாளவிகா ஷர்மா.

இப்போதைக்கு காலேஜ் படிக்கிற மாதிரி ஒரு கேரக்டருக்கு நடிகை வேண்டும் என்பதால் அமுல் பேபி மாதிரி இருக்கிற இந்த நடிகையை வெங்கட் பிரபு லாக் செய்திருக்கிறார். ஏற்கனவே இந்த கேரக்டருக்கு லவ் டுடே ஹீரோயின் இவானவை நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இவனா நடிக்க முடியாமல் போய்விட்டது.

அதனால் தற்போது மாளவிகா சர்மாவை கமிட் பண்ணி இருக்கிறார். ஒருவேளை விஜய்க்கு தங்கை கேரக்டராக கூட இருக்கலாம். அதனால்தான் பார்க்கச் சின்ன வயதுபோல் இருக்கும் ஹீரோயின் வேணும் என்பதற்காக வெங்கட் பிரபு இந்த முடிவை எடுத்திருக்கலாம். பொதுவா வெங்கட் பிரபு படம் என்றால் நடிகர்கள் கூட்டம் தான் எக்கச்சக்கமாக இருக்கும்.

ஆனால் தளபதி 68 படத்திற்காக முதல் முறையாக நடிகைகள் பட்டாளத்தை கொண்டு வந்திருக்கிறார். இன்னொரு பக்கம் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் போன்ற ஹீரோக்கள் இருக்கிறார்கள். அதே மாதிரி இவர்களுக்கு இணையாக சினேகா, லைலா போன்ற ஹீரோயின்களும் இருப்பதால் எந்த மாதிரி முடிச்சுகளை போட்டு கதையை கொண்டு வரப் போகிறார் என்பது இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைக்கத் தோன்றுகிறது.

தளபதி 68 படத்தில் இணைந்த மாளவிகா ஷர்மா

தளபதி 68-ல் மறுபடியும் ஒரு ஹீரோயினை களம் இறக்கிய வெங்கட் பிரபு.. இவானாவிற்கு பதிலாக வரும் அமுல் பேபி
Malavika sharma thalapathy-68
Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.