பப்லு, ஹீரோ வில்லத்தனத்தை காட்டிய 5 படங்கள்.. அஜித்தை ஏமாற்றி சிம்ரனை அலறவிட்ட பிருத்வி

Babloo 5 Movies: சினிமாவிற்குள் குழந்தை நட்சத்திரமாக நுழைந்த பப்லு, ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வந்த இவரால் தொடர்ந்து வெற்றியை காண முடியாமல் போய்விட்டது. முக்கால்வாசி இவர் நடித்த படங்கள் வில்லத்தனத்தை காட்டி ஹீரோவை படாத பாடு படுத்தி எடுக்கும் அளவிற்கு நெகட்டிவ் ரோலில் தான் அதிகமாக காணப்பட்டார். அப்படி இவர் ஹீரோ மற்றும் வில்லத்தனத்தை காட்டி நடித்த படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

வானமே எல்லை: கே பாலச்சந்தர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வானமே எல்லை என்கிற திரைப்படம் வெளிவந்தது. இதில் ஐந்து இளைஞர்கள் பல்வேறு காரணங்களுக்காக வாழ்க்கையில் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற கொள்கையுடன் முயற்சி எடுத்து வருவார்கள். அதில் ஒருவராக கௌதம் என்ற கேரக்டரில் பப்லு நடித்திருக்கிறார்.

மனைவி ஒரு மாணிக்கம்: 1990 ஆம் ஆண்டு சோழராஜன் இயக்கத்தில் மனைவி ஒரு மாணிக்கம் திரைப்படம் வெளிவந்தது. இதில் அர்ஜுன், ராதா மற்றும் பப்லு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பப்லு குணச்சித்திரங்களில் நடித்து அடுத்த படங்களுக்கு ஒரு வரவேற்பு கொடுக்கும் படமாக அடையாளத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறது.

Also read: நண்பன், ஜிம் தோழன் என்று சொல்லியே பப்லுக்கு ஆப்பு வைத்த ரங்கநாதன்.. 2 பயில்வான்கள் மோதலின் பின்னணி

அவள் வருவாளா: ராஜ்கபூர் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு அவள் வருவாளா திரைப்படம் வெளிவந்தது. இதில் அஜித், சிம்ரன், சுஜாதா மற்றும் பப்லு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது ஒரு சைக்கோ தனமான கேரக்டர்னால் கட்டின மனைவியை கொடுமைப்படுத்தும் வஞ்சகக்காரராக பப்லு நடித்திருப்பார். இவரிடம் இருந்து தப்பித்து புது வாழ்க்கையைத் தேடிக் கொள்ள நினைக்கும் சிம்ரனை படாத பாடு படுத்தி எடுப்பார். அத்துடன் சிம்ரன் தன் மனைவி என்கிற உண்மையை அஜித்துக்கு தெரியப்படுத்தாமல் சிம்ரனை பிளாக்மெயில் பண்ணி பணம் சம்பாதிக்கும் சைக்கோ மாதிரி நடித்திருப்பார்.

சுதந்திரம்: ராஜ்கபூர் இயக்கத்தில் 2000 ஆண்டு சுதந்திரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் அர்ஜுன், ரம்பா, ரகுவரன், பப்லு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையானது குத்து சண்டை சாம்பியனாக இருக்கும் அர்ஜுன் சுற்றி கதை நகரும். இதில் அர்ஜூனுடன் மோதிக் கொண்டு அடிக்கடி வம்பு இழுக்கும் கேரக்டரில் சார்லியாக பப்லு நடித்திருக்கிறார். கடைசியாக இருவருக்கும் போட்டி வைக்கும் பந்தயத்தில் அர்ஜுனிடம் அப்பட்டமாக தோற்றுப் போய் அதன் பின் நல்ல நண்பராக திருந்தி விடுவார்.

வாரணம் ஆயிரம்: கௌதம் மேனன் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் சூர்யா, சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா, பப்லு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் பப்லு, அசாத் என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோலில் சூர்யாவுடன் ஆக்ஷன் காட்சியில் நடித்து இவருக்கான அங்கீகாரத்தை இப்படத்தின் மூலம் பெற்றிருப்பார்.

Also read: நடிகர் திலகம் சிவாஜி தட்டிக் கொடுத்து வளர்த்த பப்லு.. குழந்தை நட்சத்திரமாக நடித்த 5 படங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்