ராகவா லாரன்சுக்கு டஃப் கொடுக்கும் விஜய் டிவி பாலா.. 5 வருட கனவை நனவாக்கிய புகைப்படம்

Vijay Tv Bala: விஜய் டிவி பிரபலங்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் யார் என்று கேட்டால் பாலாவிற்கு தான் முதலிடம் கிடைக்கும். அந்த அளவுக்கு அவருடைய நான் ஸ்டாப் காமெடி வசனங்களும், பஞ்ச் டயலாக்குகளும் மக்களிடையே வெகு பிரபலம். அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கான பெரும் அடையாளமாக இருக்கிறது.

அதைத்தொடர்ந்து தற்போது பாலா பெரிய திரையிலும் கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார். இந்நிலையில் இவர் ராகவா லாரன்சுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஒரு விஷயத்தை செய்திருக்கிறார். அந்தப் புகைப்படம் தான் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.

Also read: ஊருக்கு மட்டும் தான் உபதேசம் போல.. நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் நிப்பாட்டிய ராகவா லாரன்ஸ்

அதாவது ராகவா லாரன்ஸ் அனைவருக்கும் தேடித் தேடி போய் உதவி செய்வார். அதே போன்று தான் பாலாவும் தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்துக் கொண்டு ஆதரவற்றவர்கள், படிக்க முடியாத குழந்தைகள் என அனைவருக்கும் உதவி செய்து வருகிறார்.

இதை பலரும் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். சமீபத்தில் கூட ருத்ரன் பட இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ், பாலா படிக்க வைக்கும் குழந்தைகளுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை நன்கொடையாக கொடுத்திருந்தார். இதன் மூலம் தான் பாலா செய்யும் உதவிகள் பலருக்கும் தெரிய வந்தது.

Also read: ராகவா லாரன்ஸ் வலை வீசிய 4 நடிகைகள்.. வெளிப்படையாகவே டேமேஜ் செய்த ஹீரோயின்

அதைத்தொடர்ந்து சமீபத்தில் கூட பாவா லட்சுமணன் மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்த போது 30 ஆயிரம் ரூபாயை இவர் கொடுத்திருந்தார். இது பாராட்டுகளை பெற்ற நிலையில் தற்போது அவர் முதியோர் இல்லத்திற்காக ஒரு ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்திருக்கிறார்.

இது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இது குறித்து கூறிய பாலா, கிட்டத்தட்ட 5 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக இதற்காக நான் பணம் சேர்த்து வைத்திருந்தேன். அந்த பணத்தில் தான் இந்த ஆம்புலன்ஸை வாங்கினேன். இதன் மூலம் இல்லத்தில் இருக்கும் பெரியவர்கள் சிகிச்சைக்கு சௌகரியமாக செல்ல முடியும் என கூறியிருக்கிறார். அந்த வகையில் தன்னுடைய 5 வருட கனவை பாலா நிறைவேற்றி இருப்பது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

5 வருட கனவை நனவாக்கிய புகைப்படம்

vijay-tv bala
vijay-tv bala

Stay Connected

1,170,268FansLike
132,049FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -