1. Home
  2. கோலிவுட்

விஜய்க்கு முன்னரே 200 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ.. அதுக்கு மேலையும் வாங்க போகும் லியோ

விஜய்க்கு முன்னரே 200 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ.. அதுக்கு மேலையும் வாங்க போகும் லியோ
அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்ஷய் குமார், ரஜினி காந்த் இருந்து வந்த நிலையில் இப்போது இவர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.

நடிகர் விஜய், வெங்கட்பிரபு இயக்கில் தளபதி 68 படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் கொடுக்க பட நிறுவனம் முன்வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், விஜய்க்கு முன்னரே ஒரு ஹீரோ அசால்டாக ரூ.200 கோடி வாங்க இருக்கிறார்.

அது வேறு யாரும் இல்லை, ராஜமெளலி செல்ல பிள்ளையான பிரபாஸ் தான். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்ட நடிகர் பிரபாஸ் தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். இவர் படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டு வசூல் சாதனை படைக்கின்றன.

தற்போது நாக் அஸ்வின் இயக்கிவரும் பான் - இந்தியா படமான "ப்ராஜெக்ட் K" என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தில் தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், திஷா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சுமார் 500 கோடி ரூபாய் செலவில் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வரும் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகிவரும் இப்படத்தை 10 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

மேலும் இவர் நடிப்பில் ஆதி புருஷ், சலார் ஆகிய படங்கள் இந்த ஆண்டு ஜூன் 16 மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியாகிறது. இந்த படங்களுக்கு இவருக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர்கள் பட்டியலில் சல்மான் கான், அக்ஷய் குமார், ரஜினி காந்த் இருந்து வந்த நிலையில் இப்போது இவர்களை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் பிரபாஸ். ஆனால் நடிகர் விஜய் தளபதி 68 படத்திற்கு ரூ.200 கோடி வாங்க போகிறார் என்ற பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அதற்கு முன்னரே பிரபாஸ் அசால்டாக 200 கோடி வாங்க இருக்கிறார், அடுத்த படத்தில் அதற்கு மேலேயும் வாங்கி அனைவரையும் ஓவர்டேக் செய்து இருக்கிறார் பிரபாஸ்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.