அஜித் பாணியில் களமிறங்கிய 80-களின் வெள்ளிவிழா நாயகன்.. கைக்கொடுக்குமா ரீ-என்ட்ரி ?

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு படம் ரிலீசான 7 நாட்களில் 200 கோடி வரை உலகளவில் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. அந்த அளவிற்கு இப்படத்தில் அஜித்தின் மாஸ் வசனங்கள், ஆக்ஷன் காட்சிகள் என ஒவ்வொன்றும் படத்தில் மாஸாக அமைந்தது. மேலும் துணிவுடன் மோதிய விஜயின் வாரிசு படத்தின் கதையை காட்டிலும், துணிவு படத்தின் கதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

வங்கியில் கடன் பெற்றுக் கொள்பவர்களுக்கு ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும், பணத்தை காலடியில் வைத்து பார்க்க வேண்டுமே தவிர, தலையில் வைத்தால் அது நம்மை ஆண்டுவிடும் என்ற மெசேஜை துணிவு படத்தின் முலமாக ரசிகர்களுக்கு ஹெச் .வினோத் கூறியுள்ளார். இதனிடையே இப்படத்தின் கதை பாணியில் 80 களின் வெற்றிவிழா நாயகன் தற்போது ரீஎன்ட்ரி கொடுத்து வரும் படத்தின் கதை அமைந்துள்ளதாம்.

Also Read: சைலண்டாக வசூல் வேட்டையாடிய துணிவு.. உலகம் முழுவதும் 7 நாட்களில் செய்த கலெக்ஷன்

80 களில் ரஜினிகாந்த், கமலஹாசன், மோகன் என பல உச்ச நட்சத்திரங்கள் இருந்த போதும், கிராமத்து மண் வாசனையை முகரும் வகையில் பல படங்களில் நடித்து, பட்டிக்காடு முதல் பட்டணம் வரை ப்ளாக்பஸ்டர் நாயகனாக வளம் வந்தவர் தான் நடிகர் ராமராஜன். இவரது ஒவ்வொரு படங்களும் குறைந்தது 50 நாட்களாவது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும்.

அதிலும் முக்கியமாக ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் 200 நாட்களை கடந்து பல சாதனைகளை புரிந்தது. இப்படி ராமராஜன் வளர்ந்து வந்த காலத்தில் திடீரென அரசியலில் புகுந்ததால் சினிமா வாய்ப்புகள் அவர் கைவிட்டு சென்றது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு துணை நடிகர் கதாபாத்திரத்தில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்த ராமராஜன் தற்போது ஹீரோவாக களமிறங்கி உள்ளார்.

Also Read: துணிவு பட ஒரிஜினல் மைபா இவர்தான்.. இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

சாமானியன் என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பேசப்பட்டது. இந்த டீஸரில் எம்.ஆர்.ராதா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். நூலகத்தில் கையில் துப்பாக்கியுடன் மூவரும் சென்று நூலக காப்பாளரை சுடுவது போன்று இந்த டீசரில் காட்சிகள் இடம்பெற்றது. இதனிடையே இப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரி தற்போது வெளியாகியுள்ளது.

ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற ராமராஜன், ஒரு பங்களா வீடு கட்டி வருவதாகவும், 20 மாடுகளை வளர்க்கும் விவசாயி போல் நடிக்கிறாராம். அப்போது வங்கியில் அவர் வாங்கிய கடனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், வங்கியில் சாமானிய மக்களுக்கு கொடுக்கும் கடன் என்ற பேரில் நடக்கும் மோசடிகளை தோலுரித்து காட்டும் வகையில், ராமராஜன் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபோன்ற கதை அஜித்திற்கு கைகொடுத்தது போல் இவருக்கும் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: தீவிர மன அழுத்தத்தில் இருக்கும் ராமராஜன் பட நடிகை.. வருடக் கணக்கில் வீட்டுக்குள் முடங்கி போன மர்மம்

- Advertisement -