2022-ல் ரசிகர்கள் வெறிகொண்டு காத்துக்கொண்டிருக்கும் 8 படங்கள்.. உங்க ஃபேவரிட் மூவி எது!

கடந்த 2021ஆம் ஆண்டு தொடர்ந்து புத்தாண்டான 2022ஆம் ஆண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இன்னிலையில் 2022 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள திரைப்படங்களை குறித்து சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர். தல அஜித் நடிப்பில் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்திற்காக மூன்று வருடம் காத்து கிடக்கின்றனர். எனவே எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மென்மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.

மேலும் வலிமை படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படம், வரும் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. அத்துடன் தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் ஆனது இந்த வருடம் ரசிகர்களுக்கு கிடைத்த திரை விருந்தாக அமைய உள்ளது. எனவே நெல்சன் திலீப்குமார் இயக்கிய விஜய்யின் 65வது படமான பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தளித்தது.

இதைத்தொடர்ந்து இந்த வருடம் திரைக்கு வரவிருக்கும் அடுத்த படம் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’. இந்தப் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக கிரிக்கெட் வீரர் இம்ரான் பதன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் அதிரடி த்ரில்லர் திரைப்படமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.

அடுத்தபடியா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த ஆண்டு திரையிடப்பட உள்ள சிம்புவின் ‘வெந்து தணிந்த காடு’ ரசிகர்களால் அதிகம் ஆர்வத்துடன் காத்திருக்கும் படமாக உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்தப் படத்தில் சிம்பு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அத்துடன் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் ‘மாறன்’ திரைப்படமும் இந்த வருடம் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்தப்படத்தின் ஒரு சில போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாளவிகா மோகனின் மூன்றாவது திரைப்படமான இந்தப்படத்தில் இவருடைய நடிப்பு பெருமளவு வெளிப்படும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதைப்போன்று 2022 ஆண்டு திரைக்கு வரவிருக்கும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படமானது நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படமான டான் திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க, லைக்கா தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்களிடையே 2022 ஆம் ஆண்டு அதிக ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்த எட்டு திரைப்படமும் அடுத்தடுத்து திரையரங்கில் ரிலீசாகி ரசிகர்கள் குஷிப்படுத்த உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்