ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

லியோவில் இந்த 8 பேரை நடிக்க கூப்பிட்டு பின் வெட்டி தூக்கிய லோகி.. பெரிய ஏமாற்றத்தில் நிவின்பாலி

Leo Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் நேற்று வெளியாகி திரையரங்குகளை தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நடிக்கப் போவதாக 8 பிரபலங்களை அழைத்து பின், அந்த கதாபாத்திரத்தை லியோ படத்திலிருந்து தூக்கி விட்டார் லோகேஷ்.

அதிலும் லியோ லோகேஷின் LUC கான்செப்டில் உருவாகிறது என்பதால் அவருடைய முந்தைய படங்களான கைதி, விக்ரம் படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் லியோவில் தொடர வாய்ப்பு இருந்தது. இதனால் அந்த படங்களில் நடித்த பிரபலங்கள் எல்லாம் தன்னை லோகேஷ் நடிக்க கூப்பிடுவார் என வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.

குறிப்பாக கைதி படத்தில் தில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய கார்த்தி மற்றும் விக்ரம் படத்தில் அமர் ஏஜென்ட் கேரக்டரில் நடித்த பகத் பாசில், ஜாபர் சாதிக் உள்ளிட்டோருக்கு லியோ படத்தில் அதே கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாக  சொன்னதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

அதேபோல மலையாள நடிகர் நிவின் பாலி தமிழ் சினிமாவிலும் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். நிவின் பாலி லியோ படத்தில் இருப்பது உறுதி என செய்தி வெளியானது, ஆனால் அவரை கடைசியில் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டனர், இது அவருக்கு பெரிய ஏமாற்றத்தை தந்தது. மேலும் சமீபத்தில் காலமான இயக்குனரும் நடிகருமான மனோபாலாவிற்கும் லியோ படத்தில் நடிக்க ரொம்பவே ஆசை இருந்தது.

இவர் மட்டுமல்ல தற்போது டாப் நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் கனகச்சிதமாக நடித்து அசத்தும் சத்யராஜும் லோகேஷின் லியோ படத்தில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு பரிச்சயமான நடிகை அபிராமி வெங்கடாசலம், அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிக்காட்டினார். இவரும் லியோ படத்தில் இருக்கிறார் என நம்ப வைத்து, கடைசி வரை கூப்பிடாமல் மோசம் செய்து விட்டனர்

மேலும் பக்கா ஆக்சன் படமாக இருக்கும் லியோவில் ஏகப்பட்ட வில்லன் கதாபாத்திரங்கள் இருந்தது. தற்சமயம் தமிழ் சினிமாவில் எதிர்மறை கதாபாத்திரங்களில் மிரட்டி விடும் ஹரிஷ் உத்தமனுக்கு லியோவின் வில்லனாக நடிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கடைசியில் அந்த கேரக்டரையே லோகேஷ் தூக்கி விட்டார்.

- Advertisement -

Trending News