முதல்முறையாக இணையும் 7 கூட்டணி.. இணையத்தையே அல்லோலபடுத்திய வெங்கட் பிரபு, தளபதி காம்போ

பொதுவாக டாப் ஹீரோக்கள் புதிதாக கூட்டணி போட பயப்படுவார்கள். ஏனென்றால் அந்த இயக்குனரை பற்றி இவர்களுக்கு முன்பு தெரியாது. அதுமட்டுமின்றி தனக்கு ஹிட் படம் கொடுத்த இயக்குனர்களின் படங்களில் நடிக்க தான் அதிகம் ஆர்வம் காட்டி வருவார்கள். ஆனால் இப்போது ட்ரெண்டே மாறிவிட்டது. அதாவது தமிழ் சினிமாவின் டாப் 7 ஹீரோக்கள் முதல்முறையாக சில இயக்குனர்களுடன் கூட்டணி போடுகின்றனர்.

ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பொறுத்தவரையில் தனக்கு ஒரு தோல்வி படம் கொடுத்தாலும் அந்த இயக்குனருடன் மீண்டும் கூட்டணி போட மாட்டார். இந்நிலையில் தற்போது இளம் இயக்குனரான நெல்சன் உடன் முதல் முறையாக ஜெயிலர் படத்தில் கூட்டணி போட்டுள்ளார். இந்த படம் தாறுமாறாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் நம்புகிறார்கள்.

Also Read : லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

கமலஹாசன் : உலக நாயகன் கமல், லோகேஷ் உடன் முதல் முறையாக கூட்டணி போட்டு விக்ரம் என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார். இதன் காரணமாக கமல் இளம் இயக்குனர்களை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான எச் வினோத்துடன் கமல் கூட்டணி போட உள்ளார்.

விஜய் : தளபதி விஜய் மீண்டும் லோகேஷ் உடன் கூட்டணி போட்டு லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இணையத்தையே அல்லோலபடுத்தியது.

அஜித் : அஜித்தை பொறுத்தவரையில் ஒரு இயக்குனருடன் கூட்டணி போட்டால் அடுத்த மூன்று, நான்கு படங்கள் அதே இயக்குனருடன் தான் பயணிப்பார். ஆனால் இப்போது வினோத் கூட்டணியில் இருந்து விடிவு பெற்று மகிழ் திருமேனியுடன் முதல் முறையாக கூட்டணி போடுகிறார். விடாமுயற்சி என டைட்டிலிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

Also Read : தளபதி 68 விஜய்யுடன் மோத உள்ள சைக்கோ வில்லன்.. வெங்கட் பிரபுவின் தரமான செலக்சன்

தனுஷ் : தனுஷ் தொடர் தோல்வி படங்கள் கொடுத்து வந்த நிலையில் தற்போது சுதாகரித்துக் கொண்டு அருண் மாதேஸ்வரனை தேர்ந்தெடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாக்கி வரும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தனுஷ் உள்ளார்.

சிவகார்த்திகேயன் : தற்போது மாவீரன் மற்றும் அயலான் படங்களை சிவகார்த்திகேயன் கைவசம் வைத்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி உடன் முதல்முறையாக சிவகார்த்திகேயன் கூட்டணி போட இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். மேலும் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சிம்பு : மாநாடு படத்திற்கு பிறகு மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளார் சிம்பு. இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக இருக்கிறது.

Also Read : 100 கோடி பட்ஜெட்டில் தளபதி 68க்கு போட்டியாக களமிறங்கும் சிம்பு.. இணையத்தில் பற்றி எரியும் புகைப்படம்

- Advertisement -