சிவகார்த்திகேயனை அனைவருக்கும் பிடிக்க 7 காரணங்கள்.. மார்க்கெட் இப்பவும் நிக்க இதுதான் விஷயம்

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வந்திருந்தாலும் தற்போது வெள்ளித்திரையில் தனுஷ், சிம்பு போன்ற நடிகருக்கு இணையாக பார்க்கப்படுகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் ஹிட்டுக்குப் பிறகு தொடர்ந்து தோல்வி படம் கொடுத்தாலும் இப்பவும் அவரது மார்க்கெட் சரியவில்லை.

இவ்வாறு ரசிகர்களின் மனதில் சிவகார்த்திகேயன் நங்கூரமாக நிற்க 7 காரணங்கள் உள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் மற்ற ஹீரோக்களை காட்டிலும் புது அல்லது இளம் இயக்குனர்களுக்கு அதிகமாக வாய்ப்புக் கொடுத்து வருகிறார். இது தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : சிவகார்த்திகேயன் மாதிரி வளர முடியாமல் போன நண்பர்.. விஜய் டிவி கை கொடுத்தும் பிரயோஜனம் இல்லை

இதற்கு அடுத்தபடியாக எல்லா படத்திலும் ஹீரோக்கள் முன்கூட்டியே சம்பளத்தை வாங்கி கொள்வார்கள். ஆனால் சில படங்களில் தயாரிப்பாளரின் நிலைமையை கருதி சிவகார்த்திகேயன் படத்தை முடித்த பின்பு சம்பளம் வாங்கிக் கொள்வார். அதுமட்டும்இன்றி சில படங்களில் சம்பளம் வாங்காமலே நடித்துள்ளாராம்.

மேலும் சிவகார்த்திகேயன் இரக்க குணம் உடையவர். ஆகையால் மற்றவர்கள் பட்ட கடனை கூட சிவகார்த்திகேயன் முன் வந்த அடைத்துள்ளாராம். தன்னுடைய படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் கூட அதில் இவர் சொந்த பணத்தை கொண்டு சரி செய்துள்ளாராம். இதை மற்ற ஹீரோக்கள் செய்வார்களா என்பது சந்தேகம்தான்.

Also Read : ரஜினி உதாசீனப்படுத்திய இயக்குனர்.. ஆறுதல் கூறி அரவணைத்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தன்னுடைய படங்களில் நிறைய நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார். அதுவும் குறிப்பாக தன்னைப் போல தொலைக்காட்சியில் இருந்து வருபவர்களுக்கும், யூடியூப் போன்ற பிரபலங்களுக்கும் தனது படங்களில் நடிக்க வைக்கிறார். மேலும் பல சமூக உதவியும் செய்து வருகிறார்.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் படம் 6 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது. அந்த நஷ்டத்தையும் சிவகார்த்திகேயனை ஏற்றுக் கொண்ட கடனை அடைத்தார். இவ்வாறு சிவகார்த்திகேயனின் நல்ல குணம் மற்றும் உதவும் மனப்பான்மை தான் இன்றும் ரசிகர்கள் அவரை மனதில் வைத்துள்ளனர்.

Also Read : கடனில் இருந்தாலும் கடவுள் போல் காப்பாற்றும் சிவகார்த்திகேயன்.. பிரின்ஸ் பட தோல்விக்கு இத்தனை கோடி உதவியா.?

- Advertisement -