வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

பிரசாந்த் அதல பாதாளத்திற்குள் போனதற்கு 7 முக்கியமான காரணங்கள்.. அவர் பேச்சை வேதவாக்காக கேட்டதால் வந்த விளைவு

Actor Prasanth Carrier Failure 7 Reaseon: பொதுவாக பேரும் புகழும் வந்துவிட்டால் கூடவே தலைக்கணமும், கர்வமும் வந்து விடும் என்று சொல்வார்கள். அதனாலயே அவர்களுடைய வாழ்க்கை மொத்தமும் பாழாகி விடும். இதற்கு உதாரணமாக சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர் பிரசாந்தை சொல்லலாம். அதாவது முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்த நேரத்தில் வளர்ந்து விட்டோம் என்பதால் ரொம்பவே மெத்தனமாக பல விஷயங்களில் கோட்டை விட்டிருக்கிறார்.

அதனால் தான் தற்போது இவருடைய கேரியர் அதால பாதாளத்திற்குள் போய்விட்டது. அதற்கு முக்கியமான ஏழு காரணங்கள் இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம். அதாவது படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வராமல் நினைத்த நேரத்தில் தான் வருவார். அப்படியே வந்தாலும் ரொம்பவே தலைகனத்துடன் படப்பிடிப்பில் இருப்பவர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக நடந்து கொள்வாராம்.

Also read: தளபதிக்கு ரெண்டு கண்டிஷன் போட்ட பிரசாந்தின் அப்பா.. ஆரம்பமே இவ்வளவு அலப்பறை தேவையா சார்.!

அடுத்ததாக படத்தில் இந்த மாதிரி ஹீரோயின் தான் வேணும், இப்படி தான் டிரஸ் போட வேண்டும் என்று பெண்களிடம் கொஞ்சம் தேவை இல்லாத வார்த்தைகளை பேசுவது. அத்துடன் ஆரம்பத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் போகப்போக பிரபலமானதும் காலத்திற்கு ஏற்ற மாதிரி கதையை தேர்ந்தெடுக்க தெரியாமல் சொதப்பிருக்கிறார்.

இதனை அடுத்து முதலில் எப்படி நடித்தாரோ அதே மாதிரியே அடுத்தடுத்த படங்களிலும் நடிப்பை கொடுத்து ஒரே மாதிரி வசனங்களை பேசி பார்ப்பவர்களை போரடிக்க வைத்திருக்கிறார். இது மட்டுமில்லாமல் இயக்குனர் ஏதாவது முக்கியமான சீனை சொன்னால் அதற்கு மாற்று கருத்தாக இவருக்கு தோன்றிய விஷயங்களை சொல்லி தலையிட்டு இருக்கிறார்.

Also read: கங்குவா படத்தில் குவிந்துள்ள 10 பிரபலங்கள்.. பிரசாந்த் நீல், ராஜமௌலிக்கே டஃப் கொடுக்கும் சிறுத்தை சிவா

பிறகு இவருக்கு மார்க்கெட் கூடியதும் அதிக ஆசையினால் சம்பளத்தை டபுள் மடங்கு வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் மல்லு கட்டி இருக்கிறார். இதனால் இவரை வைத்து படம் பண்ணுவதே ரொம்ப தொல்லையாக இருக்கிறது என்று இவருக்கு பின்னாடி பலரும் தலையில் அடித்துக் கொண்டு புலம்பி இருக்கிறார்கள்.

இதோடு விடாமல் இவருடைய அப்பா என்ன சொல்கிறாரோ அதை தான் செய்வேன் என்று அவர் பேச்சை வேதவாக்கு போல் எடுத்திருக்கிறார். ஆனால் அவரோ சொந்த தயாரிப்பில் பிரசாந்தை நடிக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்று தன் மகனுக்கு தானே சூனியம் வைத்து விட்டார். அத்துடன் பிரசாந்த் கேரியரும் க்ளோஸ் ஆகிவிட்டது.

Also read: தனக்கு நிகரான வாய்ப்பு கொடுத்து 2 நடிகர்களை தூக்கிவிட்ட பிரசாந்த்.. உச்சம் தொட்ட ஒரே நடிகர் யார் தெரியுமா?

- Advertisement -

Trending News