காமெடியில் பிச்சு உதறிய 7 ஹீரோயின்கள்.. சகலகலா ராணியான ஊர்வசி

Actress Oorvasi: சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் கூட காமெடி காட்சிகளில் நடிப்பதற்கு ரொம்பவே தயங்குவார்கள். அதற்கு காரணம் படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பது என்பதுதான் ரொம்பவும் கஷ்டமான விஷயம். அதனால்தான் நிறைய ஹீரோக்கள் காமெடி காட்சிகளை முயற்சி செய்து பார்க்க மாட்டார்கள். அப்படி இருக்கும் பொழுது இந்த ஏழு ஹீரோயின்கள் காமெடி காட்சியில் பிச்சு உதறி படம் பார்க்கும் ஆடியன்ஸ்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

சௌகார் ஜானகி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்முறையாக முழு நீள நகைச்சுவை படத்தில் நடித்தது தான் தில்லு முல்லு. இந்தப் படத்தில் காமெடி சீன்களில் நடிகை சௌகார் ஜானகி ரஜினியுடன் போட்டி போட்டு சிரிக்க வைத்திருப்பார். ரஜினிக்கு அம்மாவாக நடிக்க வரும் இவர் தேங்காய் சீனிவாசனை ஒரு காட்சியில் பயங்கரமாக ஏமாற்றுவார். அந்த காட்சிக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

மனோரமா: இன்று நடிகைகள் பலர் துணிந்து காமெடி காட்சிகளில் நடிப்பதற்கு வித்திட்டவரே ஆச்சி மனோரமா தான். சென்டிமென்ட் காட்சிகளில் ஆடியன்ஸ்களை கண்கலங்க வைக்கும் இவர் காமெடி காட்சிகளில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும் தவறியதில்லை. எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித் என அத்தனை முன்னணி ஹீரோ பாடலும் இணைந்து காமெடியில் கலக்கி இருக்கிறார்.

ஊர்வசி: ஆச்சி மனோரமாவுக்கு பிறகு அவருடைய இடத்தை பூர்த்தி செய்தவர் ஊர்வசி தான். கதாநாயகியாக நடித்த காலத்தில் இருந்து இன்று வரை காமெடி காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் மகளிர் மட்டும் படத்தில் காமெடி காட்சிகளில் அசத்தி இருப்பார். ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமான முந்தானை முடிச்சு படத்திலும் காமெடியில் கைதேர்ந்தவர் ஆக நடித்திருப்பார்.

ரம்யா கிருஷ்ணன்: நடிகை ரம்யா கிருஷ்ணன் எப்படிப்பட்ட கேரக்டர் கொடுத்தாலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். கமல் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் ஆக இருக்கிறது. இதில் ரம்யா மேகி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். கமலுடன் போட்டி போட்டு காமெடி காட்சிகளில் சிரிக்க வைத்திருந்தார்.

மீரா ஜாஸ்மின்: 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னி லிஸ்டில் இருந்தவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் நடித்த ரன் திரைப்படத்தின் மூலம் வெகுவான ரசிகர்களை கவர்ந்தார். விஷாலுடன் இணைந்து நடித்த சண்டக்கோழி படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டு அடித்தது. முழுக்க ஆக்சன் கதையாக இருந்த அந்த படத்தில் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்ததே மீரா ஜாஸ்மின் தான்.

ரேவதி: எண்பதுகளில் இருந்த சிறந்த நடிகைகளில் ரேவதியும் ஒருவர். எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்த இவர் அரங்கேற்ற வேளை என்னும் திரைப்படத்தில் மாஷா என்னும் கேரக்டரில் நடித்திருப்பா.ர் பிரபு மற்றும் விகே ராமசாமி கூட்டணியில் ரேவதி நடித்த காட்சிகள் எல்லாம் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.

ஜோதிகா: நடிகை ஜோதிகா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து வருகிறார். அதில் அவர் முயற்சி செய்து பார்த்தது தான் காமெடி ரோல். ஜாக் பாட் என்னும் திரைப்படத்தில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். நடிகை ரேவதி மற்றும் ஜோதிகாவின் காம்போவில் அந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.