இந்த வாரம் ஓடிடி-யில் எகிற விடப் போகும் நம்மளோட 7 படங்கள்.. உச்சகட்ட ஆக்ரோசத்தை காட்டும் மத்தகம் 2

OTT This Week Releases: தியேட்டர்களில் படங்கள் ரிலீசான சில நாட்களிலேயே இப்போது ஓடிடி-யிலும் படங்கள் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் அவற்றை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அதிலும் வெப் சீரிஸ் நல்லாவே கல்லா கட்டுகிறது. அப்படி இந்த வாரத்தில்  மட்டும் ஓடிடி-யில் வெளியாகும் ஏழு தரமான  படங்கள் ரிலீஸ் ஆகிறது.

அக்டோபர் 11ம் தேதி ‘மிஷின் இம்பாசிபிள் டெத் ரெக்கனிங்’ என்ற ஆங்கில படம் அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 11ம் தேதி ரிலீஸ் ஆகி இருக்கிறது. அது மட்டுமல்ல விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு அமேசான் ப்ரைம் வீடியோவில் வருகின்ற அக்டோபர் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அதன் தொடர்ச்சியாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஏற்கனவே மத்தகம் வெப் சீரிஸின் முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் கிளைமாக்ஸ் நிறைந்த இரண்டாம் பாகம் அக்டோபர் 12ம் தேதி வெளியாகி இருக்கிறது. இதில் அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

குறிப்பாக போலீசாக நடிக்கும் அதர்வா இதில் டேஞ்சரான ரவுடியாக படாளம் சேகர் என்ற கேரக்டரில் நடிக்கும் மணிகண்டனை எப்படி சமாளிக்கிறார் என்பதை இந்த இரண்டாம் பாகத்தில் பார்க்க முடியும். வெறித்தனமாக இருக்கும் ‘மத்தகம் பார்ட் 2’ ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அக்டோபர் 13ம் தேதி ‘சுல்தான் ஆப் டெல்லி’ என்ற ஹிந்தி வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் அல்லு அர்ஜுனின் சொந்த ஓடிடி தளமான ஆஹா என்ற ஓடிடி தளத்தில் ‘மட்டி கதா’, ‘மிஸ்டேக்’ என்ற இரண்டு தெலுங்கு படங்கள் அக்டோபர் 13ம் தேதியான ஒரே தினத்தில் வெளியாகி கல்லா கட்ட பார்க்கிறது.

இதேபோன்று ஜி5-ல் ‘பிரேம விமானம்’ என்ற தெலுங்கு படமும் ரிலீஸ் ஆகிறது இந்தப் படத்தில் எப்படியாவது பயணிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் இரண்டு குட்டீஸ்கள் ஒருபுறமும், அவசர அவசரமாக விமானத்தை பிடிக்க செல்லும் ஒரு தம்பதி மறுபிறமும் இவர்கள் எதேர்ச்சியாக சந்திக்கும் போது என்ன  நடக்கிறது என்பதுதான் படத்தின் கதைஅக்டோபர் 12ஆம் தேதி ஜி5-ல் இன்று வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்