தொடர்ந்து திரையுலகை சோகத்தில் ஆழ்த்திய 7 மரணங்கள்.. நண்பனை கூடவே அழைத்து சென்ற மயில்சாமி

ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சில திரைப்பிரபலங்கள் மண்ணை விட்டு மறைந்து நம்மளை மிகவும் சோகத்தில் தள்ளியது. அத்துடன் சினிமா பிரபலங்களுக்கும் தொடர்ந்து அதிர்ச்சியை கொடுத்து மனவேதனையை உண்டாக்குகிறது. நாம் இழந்த திரையுலக நட்சத்திரங்களை பற்றி ஒரு தொகுப்பாக இங்கு நாம் பார்க்கலாம்.

விவேக்: இவர் 80களில் சினிமாவில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் புது புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல் போன்ற பல படங்களில் காமெடியனாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்துடன் இவர் செய்யும் காமெடி மூலம் மக்களுக்கு ஏதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று நல்ல கருத்துக்களை பதிவிட்டு வந்தார். மேலும் அப்துல் கலாமின் நல்வழி காட்டுதல்களை அனைவருக்கும் கொண்டு சேர்த்தார். இவரை அப்துல் கலாமின் பிராண்ட் அம்பாசிடர் கூட அழைக்கலாம். இவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக கலைவாணர் விருதை பெற்றார். அத்துடன் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்த இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

பிரதாப் போத்தன்: இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அத்துடன் வெற்றி விழா, லக்கி மேன், மகுடம் என பல படங்களை இயக்கியுள்ளார். எனும் நடிகராகவும் மூடுபனி ஆயிரத்தில் ஒருவன் அமரன் படிக்காதவன் என பல படங்களில் நடித்தார். இறுதியாக கமலி பிரேம் நடுக்காவேரி படத்தில் நடித்திருக்கிறார். அத்துடன் சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருது, சிறந்த இயக்குவதற்கான ஃபிலிம் பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். எத்தனையோ படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவர் நடித்த மூடுபனி படத்தில் இடம் பெற்ற “என் இனிய பொன் நிலாவே பாடல்” இன்றுவரை அனைவரும் மனதிலும் ஒழித்துக் கொண்டிருக்கிறது. உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி அன்று உயிரிழந்தார்.

Also read: குணச்சித்திர கேரக்டரில் நடித்து வெற்றி கண்ட விவேக்கின் 6 படங்கள்.. தனுஷை வெளுத்து வாங்கிய ஏகாம்பரம்

புனித் ராஜ்குமார்: பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன் புனித் ராஜ்குமார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த இவர் ” பெட்டாடா ஹூவு” என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றுள்ளார். பிறகு பூரி ஜெகநாத் இயக்கிய “அப்பு” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் தான் தமிழில் “தம்” என்ற பெயரில் சிம்பு நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. இவரது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் கடைசியாக “ஜேம்ஸ்” என்ற படத்தில் நடித்தார். இப்படம் திரைக்கு வர இருந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி அன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பிறகு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இவரது மரணச் செய்தி அறிந்ததும் கர்நாடகா திரையுலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமும் சோகத்தில் மூழ்கியது.

இயக்குனர் டிபி கஜேந்திரன்: இவர் தமிழ் திரையுலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவர் விசுவின் உதவியாளராக பணியாற்றியதால் அவரைப் போலவே குடும்ப கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய படங்கள் எங்க ஊரு காவல்காரன் பட்ஜெட் பத்மநாபன் மிடில் கிளாஸ் மாதவன் சீனா தானா பல படங்களை இயக்கியிருக்கிறார். அத்துடன் பந்தா பரமசிவம், சந்திரமுகி, வேலாயுதம், வில்லு, பேரழகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு 72 வயதான நேரத்தில் உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்து கடந்த பிப்ரவரி மாதம் 5-ம் தேதி உயிரிழந்தார்.

Also read: மயில்சாமியின் பாக்கெட்டில் கடைசியாக இருந்த பணம்.. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற போராடும் வாரிசுகள்

பாடகி வாணி ஜெயராம்: இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மல்லிகை என் மன்னன் மயங்கும், ஒரே நாள் உன்னை நான் நினைவில் காண்கிறேன், ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் போன்ற பல பாடல்களை பாடி இசையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். மொத்தம் 10 ஆயிரம் பாடல்களை பாடியவர். கலைவாணியாகப் பிறந்து வாணிஜெயரமாக மாறிய இவர் பாடிய பிரபல தமிழ் பாடல்கள் ஏராளம். 78 வயதான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி அன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் திடீரென்று மயக்கம் அடைந்த நிலையில் காலமானார்.

மயில்சாமி: இவர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான தாவணி கனவுகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து தூள், கில்லி, திருவிளையாடல் ஆரம்பம், வீரம், வீட்டில் விசேஷம் போன்ற 200-க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவையாகவும், குணசித்திர நடிகராகவும் நடித்துள்ளார். அத்துடன் மேடை நாடக நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், பல குரல் மன்னனாகவும் இருந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி அன்று இவருடைய 57 வது வயதில் மறைந்தார். இவருடைய இழப்பு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மனோபாலா: இவர்கள் அனைவரையும் தொடர்ந்து தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனர், குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என்று பன்முக திறமைகளை கொண்டவரான மனோபாலா நேற்று மறைந்திருப்பது மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  அதிலும் நண்பனின் பிரிவை தாங்க முடியாமல் ரொம்பவே துக்கத்தில் இருந்த மனோபாலா நிலைமையை பார்த்து அவரது நண்பர் மயில்சாமி அவர் கூடவே அழைத்து விட்டார்.

Also read: மனோபாலாவின் கடைசி பதிவு என்ன தெரியுமா? அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்