திருமணத்திற்குப் பின் நடிப்பை கைவிட்ட 7 கனவு கன்னிகள்.. உங்கள பித்து பிடிக்க வச்சது யாரு?

பொதுவாக திரையுலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகைகள் திருமணம் ஆகிவிட்டால் நடிப்பை தொடர மாட்டார்கள். குடும்பம், குழந்தை என்று அவர்களின் வாழ்வு வேறு புறமாக பயணிக்க ஆரம்பித்து விடுகிறது. அந்த வரிசையில் நாம் பல ஹீரோயின்களை சொல்லலாம்.

ஆனால் சில நடிகைகள் மீண்டும் நடிக்க மாட்டார்களா என்று ரசிகர்கள் ஏங்குவார்கள். அப்படி ரசிகர்களை ஏங்க வைத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன சில நடிகைகளைப் பற்றி இங்கு காண்போம்.

குஷ்பு 80 காலகட்ட தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த சில நடிகைகளில் இவரும் ஒருவர். சொல்லப்போனால் இவருக்காக கோவில் கட்டும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்களும் அப்போது இருந்தார்கள். சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே இயக்குநர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்பூ சிலகாலம் நடிப்பை விட்டு விலகி இருந்தார்.

அதன் பிறகு மீண்டும் நடிப்பிற்கு திரும்பிய அவர் குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் இவர் நடித்து குறிப்பிடத்தக்கது.

மீனா கண்ணழகி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வந்த மீனா சில வருடங்களுக்கு முன்பு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு குடும்பத்தை கவனித்து வந்த அவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ரீமா சென் மின்னலே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் வல்லவன், ஆயிரத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தன் மிரட்டல் நடிப்பை கொடுத்தார். அதன் பிறகு சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த ரீமாசென் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

ஜெனிலியா துருதுரு நடிப்பும், துள்ளலான பேச்சும் என்று சினிமாவில் வலம் வந்த இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று பிஸியாக நடித்து வந்த இவர் பாலிவுட் நடிகர் ரித்தீஷை திருமணம் செய்து கொண்டு தற்போது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

லைலா கொஞ்சி கொஞ்சி சிரித்து பேசும் இவருடைய நடிப்பை காண்பதற்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் இவர் நடித்த பிதாமகன், நந்தா உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெற்றி வாகை சூடியது. ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த லைலா சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு லைலா கார்த்தியின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்ய இருக்கிறார். இந்த தகவல் அவருடைய ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளது.

அசின் தமிழில் விஜய், அஜித், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் கஜினி திரைப்படத்தின் மூலம் அதிக பிரபலமானார். அதைத் தொடர்ந்து இந்தி திரையுலகுக்கு சென்ற அசின் சில திரைப்படங்களில் நடித்தார். அதன் பிறகு ஒரு மொபைல் கம்பெனி ஓனரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார்.

நஸ்ரியா தமிழில் ராஜா ராணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த நஸ்ரியா மிகச் சிறுவயதிலேயே மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு நடிப்பை விட்டு விலகி சில திரைப்படங்களை தயாரித்த நஸ்ரியா தற்போது தெலுங்கு திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்