ரஜினி, கமல் சேர்ந்து நடிச்சா அசிஸ்டென்டா கூட வேலை செய்ய ரெடி.. 63 வயது இயக்குனரின் ஆசை

தமிழ் சினிமாவில் கமர்சியல் என்டர்டைன்மென்ட் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என காட்டியவர்கள் மிக முக்கியமான இயக்குனரான 63 வயது இயக்குனர் இப்போது கமல் மற்றும் ரஜினி சேர்ந்து நடித்தாலும் அந்த பட இயக்குனருக்கு அசிஸ்டெண்டாக வேலை செய்யக்கூட ரெடி என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் இருதுருவ நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி மற்றும் கமல். கிட்டதட்ட பல தலைமுறை கண்ட நடிகர்களாக வலம் வரும் ரஜினி மற்றும் கமல் இப்போதும் சில முன்னணி நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்து வருகின்றனர்.

பட்டை தீட்ட தீட்டத்தான் வைரம் என்பதை போல காலம் போகப் போகத்தான் இருவருக்கும் மார்க்கெட் வேற லெவலில் உள்ளது. அதிலும் ரஜினியின் படங்கள் எல்லாம் இப்போதும் மாபெரும் வசூலை கொடுத்து வருகின்றன.

கமல் படங்கள் வசூல் செய்யவில்லை என்றாலும் ஒவ்வொரு படத்திற்கும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கும். அப்படித்தான் அடுத்ததாக விக்ரம் படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சேர்ந்து நடித்த ரஜினி கமல் ஒரு கட்டத்திற்கு பிறகு சேர்ந்து நடிக்கவில்லை. அதற்கு காரணம் கமலஹாசன் ரஜினிகாந்தை தனியாக படம் செய்யுங்கள் என்று சொன்னதுதான். அதை நினைத்து இன்றும் பெருமையாக பேசுவார் ரஜினிகாந்த். அப்படிப்பட்ட இருவருக்கும் பக்கா கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் இருவரும் இப்போது இணைந்து நடித்தாலும் அந்தப் படத்தை இளம் இயக்குனர் இயக்கினால் கூட அவர்களுக்கு அசிஸ்டென்டாக வேலை செய்ய ரெடி என கூறியுள்ளது அவரது பெருந்தன்மையை காட்டியுள்ளது.

ks-ravikuamr-cinemapettai
ks-ravikuamr-cinemapettai

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -