60 வயதில் ஐந்தெழுத்து நடிகை வேண்டும் என அடம் பிடிக்கும் நடிகர்.. அப்படி என்ன வசியம் வச்சாரோ?

சினிமாவைப் பொருத்தவரை வயதுக்கு எல்லையே இல்லை. இளம் வயதிலேயே வயதான நடிகர்கள் போல் வேடமிட்டு நடிக்கும் நடிகர்களும் இருக்கின்றனர், அதே நேரத்தில் தாத்தா வயதிலும் மேக்கப் போட்டு ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்யும் நடிகர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

அந்த வகையில் 60 வயதான மூத்த நடிகர் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். கடந்த பத்து பதினைந்து வருடங்களில் இவர் நடித்த ஒரு படம்கூட சூப்பர் ஹிட் ஆனதில்லை. ஆனாலும் சொந்த காசை செலவு பண்ணி படம் எடுத்து வருகிறார்.

இவரெல்லாம் எப்படி முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்தார் என இன்றைய தலைமுறையினர் யோசிக்கும் அளவுக்கு அவருடைய பழைய படங்களில் அவர் நடித்த நடிப்பையும், ஆடிய ஆட்டத்தையும் எடிட் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வருடத்திற்கு குறைந்தது இரண்டு படமாவது நடித்துக் கொண்டிருக்கிறார் அந்த மூத்த நடிகர். அவர் ஏற்கனவே ஐந்து எழுத்து நடிகை ஒருவருடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்.

நம்ம ஊரு சூப்பர் ஸ்டாரின் ஃபேவரட் இயக்குனர் இயக்கிய அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்டார் நடிகை நடித்ததில் இருந்தே அந்த நடிகையுடன் மீண்டும் ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என ஆசை வந்து விட்டதாம் அந்த மூத்த நடிகருக்கு.

அந்த வகையில் புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமான அந்த மூத்த நடிகர் படப்பிடிப்புக்கு வராமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறாராம். அதற்கு காரணம் அந்த நடிகையை எப்படியாவது ஜோடியாக்கி விடுங்கள் என தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விடும் அளவுக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளாராம்.

- Advertisement -