இசையால் கட்டி போட்ட சந்தோஷ் நாராயணனின் 6 மறக்க முடியாத படங்கள்.. தெறிக்க விட்ட கண்டா வரச்சொல்லுங்க

தற்போது பிரபல இசையமைப்பாளராக இருக்கும் சந்தோஷ் நாராயணன் பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். திரையுலகுக்கு வந்த வெகு விரைவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதை வென்று விட்டார். அதிலும் இவரின் இசையால் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது. இவரது பல பாடல்கள் பட்டித் தொட்டி எல்லா பக்கமும் பறந்து பிரபலமானது. அப்படிப்பட்ட இவருக்கு இன்றைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். மேலும் இவருடைய பெஸ்ட் ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

குக்கூ: ராஜு முருகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த குக்கூ படம். இதில் அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்தது. இப்படம் ரெண்டு பார்வையற்றவர்களின் காதலை பரிமாறிக்கும் விதமாக இப்படம் அமைந்திருக்கும். இப்படத்தில் இரண்டு பாடல்கள் இந்த படத்திற்கு உயிரூட்டும் விதமாக அமைந்தது. அந்த பாடலின் வரிகள் “மனசுல சூரக் காத்தே அடிக்குது காதல் பூத்தே” மற்றும் “ஆகாசத்த நான் பாக்குறேன்”.

சூது கவ்வும்: நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளிவந்தது. இதில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அசோக் செல்வன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் சந்தோஷ் நாராயணன் பிஜிஎம் மற்றும் அந்த படத்தின் ஹைலைட்டை இவருடைய இசையால் தான் நிறைந்திருக்கும். அதிலும் “காசு பணம் துட்டு மணி மணி” பாடல்கள் அனைவர் மனதையும் ஈர்த்தது.

Also read: போலீஸ் வரை சென்று அசிங்கப்பட்ட 5 நடிகர்களின் மனைவிகள்.. நயன்தாராவை அடித்த பிரபுதேவாவின் மனைவி

மெட்ராஸ்: பா.ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு மெட்ராஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் கார்த்திக், கேத்ரின் தெரேசா, கலையரசன் மற்றும் ரித்விகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை என்னதான் அரசியல் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் காதல் அழகாக வெளிப்படுத்தியதற்கு முக்கிய காரணம் சந்தோஷ் நாராயணனின் இசை தான் என்று சொல்லலாம். ஆகாயம் தீப்பிடிச்சா… நிலா தூங்குமா… நீ இல்லா நேரம் எல்லாம்… நெஞ்சம் தாங்குமா… என்ற ஒரு அழகான பாடலை எல்லாருடைய காதலுக்கும் டெடிகேட் பண்ற விதமாக கொடுத்திருப்பார்.

36 வயதினிலே: ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜோதிகா, ரகுமான், அபிராமி மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பாடல் வந்திருக்கும். அந்தப் பாடல் தான் வாடி ராசாத்தி… புதுசா… இளசா… ரவுசா… போவோம்… வாடி வாலாட்டி… வரியா… புலியா… தனியாத் திரிவோம். இப்பாடல் அத்தனை பெண்களுக்கும் ஒரு ஊன்றுகோலாக அமைந்தது.

Also read: மார்க்கெட் இழந்த நிலையில் கம்பேக் கொடுத்த 5 நடிகர்கள்.. சொல்லி அடித்து தரமான படத்தை கொடுத்த சிம்பு

பரியேறும் பெருமாள்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படம் வெளிவந்தது. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் இவருடைய இசை பெரும் ஈர்ப்பு சக்தியாக இருந்தது. இப்படத்தில் வரும் அனைத்து பாடலும் நாம் எங்கு அனுபவிக்காத ஒரு வித்தியாசமான உணர்வை கொடுத்திருக்கும்.

கர்ணன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு கர்ணன் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், ரஜிஷா விஜயன் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் “கண்டா வரச் சொல்லுங்கள் கர்ணனை கையோடு கூட்டி வாருங்கள்” என்ற கிடக்குழி மாரியம்மாளின் நாட்டுப்புறக் குரலோடு சேர்ந்து இவருடைய இசையின் குரலையும் சேர்த்து உயிரோட்டம் கொடுத்திருப்பார்.

Also read: உயிர் பயத்தைக் காட்டிய ஃபர்ஹானா.. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இந்த நிலைமையா!

Sharing Is Caring:

அதிகம் படித்தவை