விஜய், அஜித் மாறி மாறி விடாம நடித்த மறக்க முடியாத 6 நடிகைகள்.. கவர்ச்சியால் கட்டிப்போட்ட நயன்தாரா

6 unforgettable actresses that Vijay and Ajith acted alternately: இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் திரைத்துறையில் 30 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்து, வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இருவரும் நடிக்க ஆரம்பித்த 90ஸ் காலகட்டத்தில் இருந்து இன்று வரை  இவர்களின் விருப்ப நாயகியாகவும், தமிழ் சினிமாவின் கனவு கன்னிகளாகவும் வலம் வந்த 6 நடிகைகளை காணலாம்.

சங்கவி: அஜித்துடன் அமராவதி, விஜய்யுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என பல படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சங்கவி. ஆரம்ப காலங்களில் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்ட இவர், ஐட்டம் சாங்ஸ்க்கு மட்டுமே தலை காட்டும் நடிகைகளை ஓரம் கட்டி தாராளமான கவர்ச்சியுடன் காளையர்களை கிரங்க வைத்தார்.

சுவாதி: அஜித்துடன் வான்மதி திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சுவாதி. படிப்பை பாதியிலே விட்டுவிட்டு நடிக்க வந்தவர், விஜய் உடன் நடித்த தேவா படத்திற்கு பின் படிப்பை தொடர்ந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின் அமீரின் யோகி படத்தில் நடித்தவர், பின்பு திரைத்துறையை விட்டு ஒதுங்கினார்.

தேவயானி: காதல் கோட்டை, நினைத்தேன் வந்தாய் என அஜித் மற்றும் விஜய் உடன் குடும்ப பாங்கான படங்களில் மாறி மாறி நடித்த தேவயானி, திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

அஜித் மற்றும் விஜய்யின் மோஸ்ட் வான்டட் நடிகை சிம்ரன்

சிம்ரன்: முன்னணி நடிகைகள் பலர் அஜித், விஜய் உடன் நடிக்க போட்டி போட்ட நிலையில், நடிகர்கள் இருவரும் எனக்கு இவர்தான் வேண்டும் என்று அடம்பிடித்த மோஸ்ட் வான்டட் நடிகை சிம்ரன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், அவள் வருவாளா, பிரியமானவளே என போட்டி போட்டு சிம்ரனின் கால்சீட்டை வாங்கினர். 

திரிஷா: விஜய் மற்றும் திரிஷாவின் காம்பினேஷன் மக்களிடையே நல்ல வகையில் ரீச் ஆனது. கில்லியில் ஆரம்பித்த இவர்களது காம்போ, குருவி திருப்பாச்சி என பல படங்களுக்கும் தொடர்ந்தது. இறுதியாக விஜய் மற்றும் திரிஷா நடித்த லியோ மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் அஜித் உடன் கிரீடம் முதல் விடா முயற்சி வரை பல படங்களிலும் ஜோடி சேர்ந்துள்ளார் திரிஷா.

கவர்ச்சியில் கலக்கிய நயன்தாரா!

நயன்தாரா: ஆரம்ப காலத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்த நயன்தாரா அஜித்தின் பில்லா திரைப்படத்தில் படு கவர்ச்சியாக தோன்றி வளர்ச்சியின் பாதைக்கு வித்திட்டார். மேலும் விஜய் உடன் வில்லு, பிகில் போன்ற படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவின் டாப் ஒன் நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை