ஃபுல் ஷார்ட்டில் அடிச்சுக்கவே முடியாத 6 கிரிக்கெட் வீரர்கள்.. ரோஹித் போல் பயம் காட்டும் அபாயகரமான ஆட்டக்காரர்கள்

கிரிக்கெட்டில் ஒரு ஓவருக்கு ஒரு பவுன்சர் பந்து வீசலாம் என்பது விதி. இது பேட்ஸ்மேன்களை எளிதில் அவுட் ஆக்கவும், அச்சுறுத்தவும் வேக பந்துவீச்சாளர்கள் பயன்படுத்துவார்கள். பல அபாயகரமான பேட்ஸ்மேன்கள் கூட இந்த பந்தை கண்டு பயந்து விக்கெட்டை இழந்து விடுவார்கள். ஆனால் இவர்களுக்கு போட்டால் சிக்கல் என பவுலர்களே பயப்படும் 6 வீரர்களின் பட்டியல்,

பென் ஸ்ட்ரோக்ஸ்: தனி ஆளாக நின்று போட்டியை மாற்றக் கூடியவர் இவர். பென் ஸ்ட்ரோக்ஸ் இருக்கும் வரை எதிரணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி இல்லை. பல போட்டிகளில் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. எதிர்முனையில் தனி ஆளாக நின்று பென் ஸ்ட்ரோக்ஸ் போட்டியை முடித்து கொடுத்து இருக்கிறார். ஃபுல் ஷாட் மூலமாக அத்தனை ரன்களையும் அடிக்கும் திறமை கொண்டவர்.

ரிக்கி பாண்டிங்: இவரும் ஒரு ஃபுல் ஷார்ட் ஸ்பெஷலிஸ்ட். 2003 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக இவர் ஆடிய ஆட்டம் மிகவும் அச்சுறுத்தலாக இருந்தது. அந்த போட்டியில் 140 ரன்கள் அடித்திருந்தார். அதில் 8 சிக்ஸர்கள் அடங்கும். அத்தனையும் பவுன்சர் பந்துகளில் அடித்த புல் ஷார்ட்.

ரோகித் சர்மா: ஃபுல் ஷார்ட் அடிப்பதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் இவர் தான். எல்லா நாட்டு வீரர்களும், இப்பொழுது இவர் பெயரைத்தான் சொல்கிறார்கள். மிச்சல் ஸ்டார்க் , சாகின் அப்ரிடி, போல்ட் போன்ற அபாயகரமான பந்துவீச்சாளர்கள் கூட இவருக்கு பவுன்சர் பந்துகள் போட பயப்படுவார்கள்.

இயான் மோர்கன்: இவர் தலைமையின் கீழ் தான் இங்கிலாந்து அணி முதன்முதலாக உலக கோப்பையை வென்றது. நான்காவது இடத்தில் இறங்கியும் அதிரடி ஆட்டம் காட்டும் இவர் ஃபுல் ஷார்ட் அடிப்பதில் வல்லவர். ஒரே போட்டியில் 17 சிக்ஸர்கள் அடித்த ரெக்கார்ட் இவர் கையில் தான் இருக்கிறது.

டேவிட் வார்னர்: இவருக்கு ஆஸ்திரேலியாவை போலவே இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம். மிகவும் கலகலப்பான ஆட்டக்காரர். ஒரு முறை அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா பாடலுக்கு மைதானத்திலேயே நடனமாடி அனைவரையும் குதூகலம் செய்தார். இவருக்கு பவுன்சர் பந்துகள் வீசினால் சிக்கல்தான்.

விராட் கோலி: இந்திய அணியின் ரன் மிஷின். கோலிக்கு எதிரணியினர் கொடுத்த டார்கெட்டை சேசிங் செய்வது மிகவும் பிடிக்கும். ரோகித் சர்மாவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியில் ஃபுல் சாட் அடித்து தூள் கிளப்பும் வீரர் விராட் கோலி தான். ஆட்கள் இல்லாத இடத்தில் நேக்காக பந்துகளை ஃபுல் ஷார்ட் அடிப்பதில் கைதேர்ந்தவர் விராட் கோலி.