ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

லியோ படத்தில் சொல்லப்படும் 6 நெகட்டிவ் கமெண்ட்ஸ்.. கதையில் கோட்டை விட்ட லோகேஷ்

Leo movie: ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை முறியடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இன்று ரிலீஸ் செய்யப்பட்ட படம் தான் விஜய்யின் லியோ. லோகேஷ் கனகராஜின் LUC கான்செப்டில் இந்த படத்தை எடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அமைந்தது. ரிலீஸ் ஆன முதல் நாளை லியோ படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்தாலும் இந்த படத்திற்கு சில நெகட்டிவான விமர்சனங்களும் வெளியாகியுள்ளன.

அதிலும் லியோ படத்திற்கு சொல்லப்படும் 6 நெகட்டிவ் கமெண்ட்ஸ் சோசியல் மீடியாவில் தீயாய் பரவுகிறது. இந்த படத்தில் காஷ்மீரை தெளிவாக காட்ட வில்லை. லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் அவ்வளவு கஷ்டப்பட்டு மைனஸ் டிகிரியில் எடுத்தார்கள். அதெல்லாம் இப்ப வேஸ்டா போச்சே! என ஆதங்கப்படுகின்றனர். இன்னும் காஷ்மீரை இந்த படத்தில் அழகாகவும் தெளிவாகவும் காட்டி இருக்கலாம்.

படம் முழுக்க எரிச்சல் ஏற்படும் அளவுக்கு ஓவர் ஃபைட் சீன் தான். எதுக்கெடுத்தாலும் அடிச்சுகிட்டு சண்டை போடுகிறார்கள். லோகேஷ் லியோ படத்தின் ஸ்டோரியில் கோட்டை விட்டுட்டாரு. கதை தெளிவாகவே இல்லை. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் இருக்கிறார் என ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் படத்தை பார்க்க சென்றனர்.

ஆனால் சஞ்சய் தத் பெயர் மட்டும்தான், அவருக்கு எந்த ஒரு காட்சியும் இல்லை. செட் பிராப்பர்ட்டி போலவே அவரை பயன்படுத்தியது படத்தில் இருந்த இன்னொரு மைனஸ் பாயிண்ட். இதற்கு முன்பு லோகேஷ் இயக்கத்தில் வெளியான கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களின் கலவைதான் லியோ. இது லோகேஷ் ஸ்டோரி கண்டிப்பா பிடிக்கும் என திணித்த மாதிரி இருக்குது.

மேலும் கில்லி படத்திற்கு பிறகு 20 வருடம் கழித்து விஜய்- திரிஷா ஜோடி இணைந்திருப்பதால் இவர்களின் ரொமான்ஸ் காட்சி படத்தில் தூக்கலாக இருக்கும் என நினைத்தனர். லோகேஷ் படத்தில் எப்போதுமே கதாநாயகி சாவடிச்சிடுவாரு, ஆனா இந்த படத்தில் திரிஷாவை விட்டு வச்சதே பெருசு.

ஆனால் இந்த ரொமான்டிக் ஜோடிக்கு படத்தில் ஒரு டூயட் கூட கொடுக்காதது லியோ படத்தின் முக்கியமான மைனஸ் பாயிண்ட். இந்த 6 விஷயங்கள் மட்டும் படத்தில் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் படம் டக்கரா இருந்திருக்கும்.

- Advertisement -

Trending News