சினிமாவுக்காக பெயரை மாற்றிக்கொண்ட 6 இஸ்லாமிய பிரபலங்கள்.. பூ பெயர் தான் வேணும் என அடம்பிடித்த குஷ்பூ

நடிகர், நடிகைகள் படங்களில் நடிக்கும்போது அவர்களின் பெயர்களை மாற்றி வருவது சகஜமான ஒன்று தான். அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் ஜெயம் ரவி வரை சினிமாவுக்காக தங்கள் இயற்பெயர்களை மாற்றிக்கொண்ட நடிகர்கள் பலர் உள்ளனர். இதனிடையே இஸ்லாமிய நடிகர்களும் சினிமாவுக்காக தங்களது பெயர்களை மாற்றிக்கொண்டுள்ளனர். அப்படி பெயர்களை மாற்றியுள்ள 6 இஸ்லாமிய நடிகர்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

நதியா: 80களின் கனவுகன்னியாக வலம் வந்த நடிகை நதியா, தற்போது பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சியே இல்லாமல், தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட நதியா ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். அந்த வகையில் ஜரீனா மொய்து என இருந்த தனது இயற்பெயரை சினிமாவுக்காக நதியா என மாற்றிக்கொண்டார்.

Also Read: ரசிகர்களால் கடவுளாக பார்க்கப்பட்டு கோவில் கட்டப்பட்ட 6 நடிகைகள்.. குஷ்பூவால் ஆரம்பித்த மட்டமான வேலை

குஷ்பூ: எத்தனையோ நடிகைகள் வந்தாலும் குஷ்பூ மாதிரி வருமா என சொல்லும் அளவுக்கு கொழு கொழுவென உடல் தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை குஷ்பூ. தற்போயது அரசியலில் ஆர்வம் காட்டி வந்தாலும், குஷ்பூ நடிக்க வந்த காலத்தில் இவருக்கு கோவிலே ரசிகர்கள் கட்டினர். அந்த அளவுக்கு குஷ்பூ தமிழ் ரசிகர்களின் நீங்கா இடம் பிடித்தவர். இதனிடையே இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த குஷ்பூவின் இயற்பெயர் நக்கத் கான்.

சதா: தமிழில் ஜெயம், அந்நியன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சதா தற்போது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக வளம் வருகிறார். பட வாய்புக்காக அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர். சதாப் முகமது சையத் என்ற தனது இயற்பெயரை சினிமாவில் நடிப்பதற்காக சதா என மாற்றிக்கொண்டார்.

Also Read: பாப் கட்டிங் ஹேர் ஸ்டைலில் குஷ்பூ.. நியூ லுக்கை பார்த்து ஆடிப்போன கோலிவுட்

ஷாம்: இயற்கை,12பி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த நடிகர் ஷாம், விஜய்யின் வாரிசு படத்தின் மூலமாக ரீ.என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக ஷாம் நடித்த நிலையில், இதன் மூலம் இவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த நடிகர் ஷாமின் இயற்பெயர் சம்சுதீன் இப்ராஹிம்.

மும்தாஜ்: 2000 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை மும்தாஜ். விஜய்யுடன் குஷி படத்தில் இவர் ஆடிய கட்டிப்பிடி, கட்டிப்பிடிடா பாடலை பார்க்கவே திரையரங்கில் கூட்டம் கூடியது. அந்த அளவுக்கு தனது கவர்ச்சியால் உச்சத்திலிருந்த மும்தாஜ் திடீரென மார்க்கெட் இழந்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்நிகழ்ச்சியும் இவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், தற்போது தனது இஸ்லாமிய மதம் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார். சினிமாவுக்காக மும்தாஜ் என்று பெயர் மாற்றிக்கொண்ட இவரது இயற்பெயர் நக்மா கான்.

ராஜ்கிரண்: தமிழில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்த ராஜ்கிரண் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முதன்முறையாக 1 கோடி ருபாய் சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இவரின் இயற்பெயர் மொய்தீன் அப்துல் காதர்.

Also Read:  ராஜ்கிரண் காலில் விழுந்து கதறும் கார்த்தி.. சூட்டிங் ஸ்பாட்டில் வேஷ்டி பாய் செய்யும் அக்கப்போரு

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -