கவர்ச்சியை காட்டி கண்டமாக்கிய மும்தாஜின் 6 படங்கள்.. குஷி படத்தில் பயங்கர டஃப் கொடுத்த தளபதி

ஒரு காலத்தில் கிளாமர் பாடல்களுக்கு விஜய் பெயர் போனவர். அவர் அப்பா இயக்கிய படத்தில் எப்படியும் ஒரு கிளாமர் பாடலில் விஜய் கலக்கி விடுவார். அப்படி சங்கவியை உடன் இவர் நிறைய கிளாமர் பாடல்களில் நடனமாடி இருக்கிறார். அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு மும்தாஜ் உடன் குஷி படத்தில் இவர் போட்ட ஆட்டம் இன்றும் மறக்க முடியவில்லை. மேலும் மும்தாஜ் 6 படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடிய பாடல்களை இப்போதும் இளசுகள் கண் சிமிட்டாமல் பார்க்கின்றனர்.

மோனிஷா என் மோனோலிசா: 1999 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மும்தாஜ் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதில் கதாநாயகியாக மட்டுமல்லாமல் கவர்ச்சி காடாகவே படம் முழுவதும் வலம் வந்திருப்பார். மேலும் இவர் என்ட்ரி கொடுத்த முதல் படத்திலிருந்து ஏகப்பட்ட ரசிகர்களை வசியம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: அடைத்து வைத்து கொடுமை.. வசமாக சிக்கிய நடிகை மும்தாஜ்

மலபார் போலீஸ்: 1999 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் திகில் கலந்த நகைச்சுவை படமாக வெளிவந்த படம் தான் மலபார் போலீஸ். இந்த படத்தில் சத்யராஜ், குஷ்பூ, அப்பாஸ், மும்தாஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ஜூலி என்ற கேரக்டரில் மும்தாஜ் எல்லை மீறிய கவர்ச்சியை காட்டியது மட்டுமல்லாமல், இந்தப் பாடலில் இடம்பெற்ற பாடல்களிலும் நடனமாடி இளசுகளை திணறடித்திருப்பார்.

பட்ஜெட் பத்மநாதன்: 2000 ஆம் ஆண்டில் பிரபு ரம்யா கிருஷ்ணன் ஜோடி சேர்ந்த பட்ஜெட் பத்மநாதன் படத்தில் ஓமண்னா என்ற கேரக்டரில் மும்தாஜ் கிளாமர் தூக்கலாக நடித்திருப்பார். இதில் விவேக் உடன் கேரளத்து பெண்குட்டியாக மும்தாஜ் கவர்ச்சி தூக்கலாக நடனம் ஆடி இருப்பார்.

Also Read: டிஆர் தூக்கிவிட்ட 5 நடிகைகள்.. கவர்ச்சிக்காக பிரபலமான அந்த நடிகை

குஷி: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா இணைந்து நடித்த இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதில் ஜோதிகாவை வெறுப்பேற்ற வேண்டும் என மும்தாஜ் உடன் விஜய் அடிக்கும் லூட்டி கொஞ்சம் நெஞ்சம் அல்ல. அதிலும் விஜய், மும்தாஜ் இணைந்து ஆடிய பாடல் செம கிளாமராக இருக்கும்.

வேதம்: 2001 ஆம் ஆண்டு ரொமான்டிக் காதல் திரைப்படமான வேதம் படத்தில் அர்ஜுன், சாக்ஷி, வினித், மும்தாஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் பூஜா கேரக்டரில் மும்தாஜ், கவர்ச்சி தூக்கலாக நடித்திருப்பார். அதிலும் இந்த படத்தில் அர்ஜுன் உடன் மும்தாஜ் ஒரு கவர்சியான பாடலுக்கு ஆடி ரசிகர்களை திணறடித்தார்.

ஏழுமலை: 2002 ஆம் ஆண்டு அர்ஜுன், சிம்ரன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் சிம்ரன் சகோதரியாக சந்தியா கேரக்டரில் மும்தாஜ் கிளாமர் தூக்கலாக நடித்திருப்பார்.

Also Read: நடிகை மோனல் தற்கொலையின் பின்னணி.. நீண்ட நாட்களுக்கு பிறகு சிக்கிய பெரிய தலைகள்

இவ்வாறு இந்த 6 படங்களிலும் மும்தாஜ் கவர்ச்சியை காட்டி கண்டம் ஆக்கியிருப்பார். அதிலும் குஷி படத்தில் மும்தாஜ்-க்கு பயங்கர டஃப் கொடுத்திருக்கும் விஜய் ஓவர் அலப்பறை செய்திருப்பார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்