மதம் மாறிய 6 சினிமா பிரபலங்கள்.. காதலுக்காக கடவுளை தூக்கி எறிந்த முன்று நடிகைகள்

சினிமாவில் உள்ள பிரபலங்கள் காதல் அல்லது மதத்தின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக வேறு மதத்திற்கு மாறி உள்ளனர். ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் பிறந்து வளர்ந்த மதத்தினை மாற்றிக் கொண்டுள்ளனர். அவ்வாறு சில பிரபலங்கள் யார் எந்த மதத்திற்கு மாறி உள்ளார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.

குஷ்பூ : 80,90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. அப்போதைய காலகட்டத்தில் குஷ்பு, பிரபு இருவரும் நிறைய படங்களில் நடித்ததால் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. அதன் பின்பு குஷ்பு இயக்குனர் சுந்தர் சியை காதலித்த இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்து பெண்ணாகவே மாறி வாழ்ந்து வருகிறார் குஷ்பு.

ஏஆர் ரகுமான் : உலக அளவில் புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவரது தந்தை இந்து மதத்தைச் சார்ந்தவர். இந்நிலையில் ரகுமான் வளரும் போது கடவுள் நம்பிக்கை இன்றி நாத்திகராக வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. அதன் பின்பு இஸ்லாம் மீது ஏற்பட்ட பற்றினால் முஸ்லிம் மதத்திற்கு மாறியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் மகனான இவர் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். இருமுறை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற யுவன் மூன்றாவது முறையாக ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஜோதிகா : டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ஜோதிகா. இவர் தன்னுடன் நடித்த சூர்யாவை காதலித்து வந்தார். ஆனால் இவர்களது திருமணத்திற்கு சூர்யாவின் தந்தை சிவக்குமார் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்திகள் வெளியானது. அதன்பிறகு குடும்பத்தினரின் முழு சம்மதத்துடன் இவர்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. இதனால் முஸ்லிமாக இருந்த ஜோதிகா இந்துவாக மாறினார்.

குறளரசன் : டி ராஜேந்தரின் இளைய மகனான குறளரசன் தனது குடும்ப ஒப்புதலுடன் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறினார். இதுகுறித்து டி ராஜேந்தர் வெளிப்படையாக பத்திரிகையாளர்களை அழைத்து அறிவிப்பு செய்திருந்தார். குறளரசன் சில திரைப் படங்களில் நடித்ததுடன் ஒரு சில படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

நயன்தாரா : கேரள மாநிலத்தை சேர்ந்தவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது பெற்றோர்கள் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள். இந்நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலிக்க ஆரம்பித்த பின்பு இந்து கோயில்களுக்கு அடிக்கடி சென்று வந்தார். அதுமட்டுமல்லாமல் இந்து முறைப்படி நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது. இதனால் நயன்தாரா கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார்.