IMDB இந்தியளவில் பாப்புலரான 6 பிரபலங்கள்.. அஜித், விஜய்யை காணாமல் ஆக்கிய நடிகர்

உலகம் முழுவதும் திரைப்பட விமர்சன ரேட்டிங்கிற்காக சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அறியப்படும் இணையதள பக்கமான IMDB, இந்த ஆண்டின் இந்தியளவில் பாப்புலரான 6 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அஜித், விஜய் காணாமல் ஆக்கியுள்ளார் பிரபல நடிகர்.

ரித்திக் ரோஷன்: பாலிவுட்டில் வாரிசு நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ரித்திக் ரோஷன் ஹிந்தி படங்களில் நடித்து பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். ரித்திக் ரோஷன் நடித்த க்ரிஷ் திரைப்படம் தமிழிலும் பிரபலமானதை தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து ஹிந்தி படங்களும் தமிழ் மொழியில் டப் செய்து வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் திரை உலகிலும் பிரபலம் ஆகினார். இவ்வாறு உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை வசியப்படுத்தி இருக்கும் இவர் தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகளின் லிஸ்டில் 6-ம் இடத்தை பெற்றுள்ளார்.

சமந்தா:தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா 2022 ஆம் ஆண்டில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில் சமந்தா இந்திய அளவில் பிரபலமானவர்களின் லிஸ்டில் 5-ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

Also Read: 2022-ல் அதிகமா பேசப்பட்டு கொடிகட்டிப் பறந்த 6 இயக்குனர்கள்.. மணிரத்தினத்துக்கே சவால் விட்ட இளம் இயக்குனர்

ராம்சரண்: மாவீரன், நாயக் போன்ற படங்களின் மூலம் தமிழ் திரை உலகிற்கு பரீட்சியமான ராம்சரண், தற்பொழுது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ராம்சரண் நடிக்கும் இப்படம் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது இப்படத்தை ராஜு தயாரிக்கிறார். மேலும் உலக அளவில் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கி 2022 ஆம் ஆண்டு பிரபலமான நடிகர்களின் பட்டியலில் 4-ம் இடத்தை பிடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய்: தமிழ் சினிமா வரலாற்றில் எந்த ஒரு கதாநாயகிக்கும் கிடைக்காத பெருமை நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது. தமிழில் இதுவரை அதிக பொருள் செலவில் தயாரான இரண்டு பிரமாண்டமான படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் வெளிவந்த எந்திரன் திரைப்படம் அதிக வசூலை குவித்தது. அத்துடன் இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருடைய ஒட்டுமொத்த திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களாக அமைந்தது.

பொன்னியின் செல்வன் முதல் பகுதியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பகுதியில் மந்தாகினி கதாபாத்திரத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இதனால் இந்திய அளவில் பிரபலமானவர்களின் பட்டியலில் இவர் 3-ம் இடத்தில் உள்ளார்.

Also Read: 2022-ல் சிறந்த டாப் 5 ஹீரோஸ்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஏஜென்ட் விக்ரம்

அலியா பட்: பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் ஆலியா பட் தனது மாறுபட்ட மற்றும் உணர்ச்சி பூர்வமான சவாலான கதாபாத்திரங்களுக்கு விமர்சனமான பாராட்டுகளுடன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சிறந்த திரையில் பட நடிகர்களுக்கான லிஸ்டில் அலியா பட் 2-ம் இடத்தை பிடித்தார்.

தனுஷ்: இவர் கோலிவுட், பாலிவுட் தாண்டி ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில்இரட்டை வேடத்தில் வில்லனாகவும் கதாநாயகனாகவும் நானே வருவேன் படத்தின் மூலம் நடித்து அசத்திய தனுஷ், அந்தப் படத்தை தொடர்ந்து தற்பொழுது வாத்தி படத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு இந்திய அளவில் பிரபலமானவர்களின் லிஸ்டில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

Also Read: 2022 ஆம் ஆண்டு ரசிகர்களை கொண்டாட வைத்த 6 மியூசிக் டைரக்டர்கள்.. ஏ ஆர் ரகுமானை பின்னுக்கு தள்ளிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி

இவ்வாறு இந்த 6 பிரபலங்களும் 2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நபர்களாக உள்ளனர். அதிலும் இதில் தமிழ் நடிகரான தனுஷ் முதல் இடத்தை பிடித்ததன் மூலம் கோலிவுட் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்து காட்டுகின்றனர்.