ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

காரணத்தோடு வெளிவந்த 6 லவ் அண்ட் பிரேக்கப்ஸ்.. அஜித்தை விரட்டி விட்ட காதலியின் அம்மா

தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் ஜோடி நட்சத்திர தம்பதியர்களாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையில், காரணத்தோடு லவ் பிரேக்கப் ஆன 6 ஜோடிகளை பற்றி பார்ப்போம்.

விஷால்- வரலட்சுமி: கோலிவுட்டில் மிக அதிகமாக பேசப்பட்ட காதல் கதைகளில் முக்கியமானது வரலட்சுமி மற்றும் விஷால் காதல் கதை தான். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் திடீரென்று வரலட்சுமி விஷாலின் காதலை உதறித் தள்ளி விட்டார். காரணம் பையன் கேரக்டர் சரியில்லை என தெரிந்ததும் கழட்டிவிட்டார்.

சிம்பு- நயன்தாரா: முதலில் நடிகை நயன்தாரா சிம்புவை காதலித்தார். அவருடன் வல்லவன் என்கின்ற படத்தில் இணைந்து நடிக்கும் போது படுக்கையறை காட்சிகள் மற்றும் முத்த காட்சிகள் என ஏகத்திற்கு கிளாமர் காட்டி திணறடித்தார். அதுமட்டுமல்ல இவர்கள் டேட்டிங் செய்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. ஆனால் திடீரென்று சிம்புவிற்கு படமே ஓடவில்லை. இவரிடம் இருந்தால், நம் கேரியர் போய்விடும் என்று நைஸ் ஆக நயன்தாரா ஒதுங்கிவிட்டார்.

Also Read: என்னை மன்னித்து ஏற்றுக்கொள் வரலட்சுமி.. கையை பிடித்து கதறிய விஷால்

நயன்தாரா- பிரபுதேவா: சிம்புவுக்கு பிறகு நயன்தாரா டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவாவை காதலித்தார். இவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் இணைந்து கலந்து கொண்டு தங்கள் காதலை உறுதிப்படுத்தினர். அதேசமயம் நயன்தாரா, பிரபுதேவாவை இயக்குனராக தூக்கி விட வேண்டும் என அவர் இயக்கிய வில்லு படத்தில் ஓவர் கிளாமராக நடித்திருப்பார்.

பின்பு நயன்தாரா மற்றும் பிரபுதேவா இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ஏற்கனவே திருமணம் ஆகி இருந்த பிரபுதேவா தன்னுடைய மனைவிக்கு டைவர்ஸ் கொடுக்காமல் நயன்தாராவை திருமணம் செய்து கொள்வது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் பிரபுதேவாவின் மனைவி மற்றும் நயன்தாராவிற்கு இடையே குடுமிபிடி சண்டை போடும் அளவுக்கு பிரச்சனை பெரிதானதால் இருவரும் பிரிந்து விட்டனர்.

சித்தார்த்- சமந்தா: தமிழ் சினிமாவில் சமந்தா வளர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு சித்தார்த்துடன் காதல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில், சித்தார்த் ஹீரோவாக நடித்த ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் கதாநாயகியான கன்னட ஹீரோயின் உடன் கிசுகிசுக்கப்பட்டதால் சமந்தா அவரை கழட்டிவிட்டார்.

Also Read: குழந்தைகளின் பெயரை அறிவித்த விக்கி-நயன்.. எல்லாத்திலும் வித்தியாசம் காட்டும் ஜோடி

தனுஷ்- ஸ்ருதிஹாசன்: தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் ஹீரோயின் ஆக கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பார். இந்த படத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் நெருக்கமாக நடித்த காட்சிகளால், அவர்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் நெருங்கி பழகிய புகைப்படங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு தனுஷ் தன்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின்களுடனும் ஓவர் அழிச்சாட்டியம் செய்பவர் என புரிந்துகொண்டு ஸ்ருதிஹாசன் விலகினார்.

அஜித்- ஹீரா: ஷாலினிக்கு முன்பு அஜித் நடிகை ஹீராவை காதலித்தார். இவர்கள் இருவரும் தங்களது காதலை படங்களில் நெருக்கமான காட்சிகளின் மூலம் ரசிகர்களுக்கும் உணர்த்தினர். ஆனால் கடைசியில் ஹீராவின் அம்மா அஜித்திடம், ‘என் மகள் இப்பொழுதுதான் வளர்ந்து வருகிறார். அதனால் இந்த காதல் கை கூடாது’ என்று விரட்டி விட்டார்.

Also Read: அஜித்க்கு வலை விரித்த 5 டாப் நடிகைகள்.. ச்சீ! ச்சீ! என துரத்தி முரட்டு சிங்கிளாக வாழ்ந்த காதல் மன்னன்

இவ்வாறு இந்த 6 காதல் ஜோடிகள் திருமணத்தில் இணைய முடியாமல் காரணம் சொல்லி பிரிந்து விட்டனர். அதிலும் அஜித் காதலை ஹீராவின் குடும்பம் ஒத்துக் கொள்ளாததால் பிரிந்து விட்டது. அந்த சமயம் தல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

Trending News