இந்த வருடம் மண்ணை கவ்விய 6 படங்கள்.. டாப் ஹீரோக்கள் கொடுத்த மோசமான தோல்வி

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் தொற்று காரணமாக படங்கள் வெளியாகாத நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து டாப் நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பெரிய நடிகர்களின் படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி படுதோல்வியை சந்தித்துள்ளது. அவ்வாறு 2022-ல் மண்ணை கவ்விய 6 படங்களை தற்போது பார்க்கலாம்.

எதற்கும் துணிந்தவன் : சூர்யாவின் சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது.

Also Read :இணையத்தில் அடித்துக்கொள்ளும் விஜய், அஜித், சூர்யா ரசிகர்கள்.. இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துறது

காத்துவாக்குல 2 காதல் : விஜய் சேதுபதி கமலஹாசனின் விக்ரம் படத்தில் மாஸ் சம்பவம் செய்திருந்தார். அதேபோல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியான மாமனிதன் படமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. ஆனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் படம் மோசமான விமர்சனங்களை பெற்றது.

தி வாரியர் : இயக்குனர் லிங்குசாமி பல வருடம் கழித்து தி வாரியர் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இப்படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படத்தில் இடம்பெற்ற புல்லட்டு பாடல் வேற லெவலில் ட்ரெண்டானது. மேலும் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் நடித்திருந்தனர். தி வாரியர் படம் வெளியாகி படுதோல்வி அடைந்தது.

Also Read :மிஷ்கினுக்காக சூட்டிங்கை நிறுத்திய விஜய்சேதுபதி.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

கோப்ரா : சமீபகாலமாக விக்ரம் ஒரு வெற்றி படம் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். அந்த வகையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவான கோப்ரா படத்தில் பல கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வணிக ரீதியாக மோசமான தோல்வி அடைந்தது.

மகான் : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ்விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம் மகான். அப்பா, மகன் இருவரும் முதல்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் படம் வெளியாகி தோல்வியை சந்தித்தது.

Also Read :விக்ரம் வெற்றியால் அரசியலை மறந்த உலக நாயகன்.. 3 பெரிய நடிகர்களுக்கு விரித்த வலை

மாறன் : கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், மகேந்திரன், சமுத்திரகனி மற்றும் பல நடிப்பில் வெளியான மாறன் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய பின்னடைவு சந்தித்தது. இந்த ஆண்டு தொடர் தோல்வியை சந்தித்து வந்த தனுஷுக்கு திருச்சிற்றம்பலம் படம் வெற்றியை தந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்