நட்புக்காக ஓடி வெற்றி கண்ட 6 படங்கள்.. இரண்டு தலைமுறையாக பேசப்படும் தேவா, சூர்யாவின் நட்பு

Friendship Movies: சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றாலும், சில படங்கள் நட்பு ரீதியாக வந்தால் அதற்கு தனி மகத்துவம் உண்டு. நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. அது என்னென்ன படங்கள் என்று தற்போது ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

காதல் தேசம்: கதிர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு காதல் தேசம் திரைப்படம் வெளிவந்தது. இதில் அப்பாஸ், வினித், தபு, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ஆரம்பத்தில் எதிரும் புதிருமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த அப்பாஸ் மற்றும் வினித் போக போக இவர்களின் நட்பை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு இருவரும் தோஸ்தாக மாறி நடித்திருப்பார்கள். நட்புக்கு உதாரணமாக  “முஸ்தபா முஸ்தபா டோன்ட் டோரி முஸ்தபா” என்ற பாடல் எல்லா பக்கமும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

Also read: அப்பாஸ் வாழ்க்கையில் இவ்வளவு சோகம் நடந்திருக்கிறதா.. லட்டு போல் கிடைத்த 5 வாய்ப்புகளை தடுத்து நிறுத்திய துரோகி

பிரண்ட்ஸ்: இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு பிரண்ட்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயானி, வடிவேலு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய், சூர்யா மற்றும் ரமேஷ் கண்ணா மூன்று பேரும் நண்பர்களாக நடித்திருப்பார்கள். ஆனால் எதிர்பாராத ஒரு கட்டத்தில் இவர்களுடைய நட்பில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது. பிறகு அதையெல்லாம் தாண்டி எப்படி நண்பர்கள் ஒன்று சேர்கிறார்கள் என்பதை காட்டப்பட்டு இருக்கும்.

கண்ணெதிரே தோன்றினாள்: இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், கரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் கரண், நண்பர்களே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்த நிலையில் பிரசாந்தின் புனிதமான நட்பை பார்த்து இவன் தான் என்னுடைய உயிர் நண்பன் என்று சொல்லும் அளவிற்கு இருவரும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார்கள்.

Also read: நடிக்காமலேயே 5 தலைமுறைக்கு சேர்த்து வைத்த பிரசாந்த்.. வியக்க வைக்கும் சொத்து விவரம்

நண்பன்: இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு நண்பன் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நட்பென்றால் என்னன்னு தெரியாம இருந்த ஜீவா மற்றும் ஸ்ரீகாந்துக்கு, விஜய்யின் உண்மையான நட்பை புரிந்து கொள்வார்கள். பிறகு நண்பன் என்றால் சந்தோஷத்திற்கு மட்டுமில்லாமல் கஷ்டத்திற்கும் பங்கு கொள்ளக்கூடிய உண்மையான உயிர் தோழன் என்பதை காட்டிய படமாக இருக்கும்.

சுப்ரமணியபுரம்: இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படம் வெளிவந்தது. இதில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, ஸ்வாதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் நட்பு மற்றும் சில நம்பிக்கையில்லாத பொய்யான நண்பர்களால் ஏற்படும் துரோகங்கள் இரண்டையும் அழகாக உணர்த்திய படமாக தற்போது வரை மக்கள் மனதில் நிலைத்து கொண்டிருக்கிறது. தன் நண்பனின் உயிர் இழந்ததற்கு துரோகம் தான் காரணம் என்று நண்பனுக்காக அனைவரையும் பழி வாங்கக்கூடிய உண்மையான பிரண்ட்ஷிப்பை மையமாக காட்டப்பட்டிருக்கும்.

தளபதி: மணிரத்தினம் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தளபதி திரைப்படம் வெளிவந்தது. இதில் ரஜினி, மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீவித்யா, பானுப்ரியா, சோபனா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ரஜினி, மம்முட்டியும் இணை பிரியாத நண்பர்களாக சூர்யா மற்றும் தேவா என்ற கேரக்டரில் நடித்திருப்பார்கள். முக்கியமாக தேவாவுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து அனைவரையும் பூரிப்படைய செய்திருப்பார். அந்த வகையில் “பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை” இந்த வரிகளைக் கேட்கும் பொழுது நட்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர வைத்திருக்கும். இரண்டு தலைமுறையாக இந்த நட்பு கொண்டாடப்பட்டு வருகிறது.

Also read: ரஜினி-170 படத்திற்கு புதுவிதமாக கையாள ஆர்டர் போட்ட தலைவர்.. இந்த மாதிரி ஒரு அறிவிப்பு வந்ததே இல்லை!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்