வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

அஜித், விஜய் தியேட்டர்களில் தாலாட்டி தூங்க வைத்த 6 படங்கள்.. படு தோல்வி சந்தித்த சுறா

தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர்களுடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடப்படும். ஆனால் அஜித், விஜய்யின் நடிப்பில் வெளியான படங்களில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய 6 படங்கள் தான் தியேட்டர்களில் ரசிகர்களை தாலாட்டி தூங்க வைத்தது.

ஆஞ்சநேயா: 2003 ஆம் ஆண்டு என் மகாராஜன் இயக்கத்தில் அஜித் குமார், மீரா ஜாஸ்மின், ரகுவரன், கோவை சரளா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருப்பார்கள். அஜித் படம் என்றாலே ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது. இந்த படத்தில் ஆக்சன் இருந்தும் கதையில் எந்தவித விறுவிறுப்பும் இல்லாததால் திரையரங்கிற்கு இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் தூங்கி வழிந்தனர்.

ஜனா: 2004 ஆம் ஆண்டு அஜித், சினேகா நடிப்பில் வெளியான ஜனா திரைப்படத்திற்கு வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. மும்பையில் பிரபல ரவுடியாக இருக்கும் ஜனா அங்கிருக்கும் பயங்கரமான ரவுடியை கொன்றுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இதன் பிறகு அவரை சுற்றி இருக்கும் எதிரிகளை எப்படி சமாளிக்கிறார், ஒருதலையாக காதலிக்கும் சினேகாவை கரம் பிடிப்பாரா என்பதுதான் இந்த படத்தின் கதை. படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்த விறுவிறுப்பு இல்லாததால் திரையரங்கில் சென்று பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.

Also Read: அஜித் போலவே 80களில் இருந்த நடிகர்.. இரண்டு பேருக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?

ஆதி: 2006 ஆம் ஆண்டு ரமணா இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான ஆதி திரைப்படம் ஆக்சன் கலந்த குடும்ப செண்டிமெண்ட் படமாக இருந்தது. இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் ஓரளவு வரவேற்பு மட்டுமே கிடைத்ததுடன் கலவையான விமர்சனத்தையும் பெற்றது. ஏனென்றால் அந்த சமயத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தாறுமாறாக வசூல் வேட்டையாடிய நிலையில், ஆதி படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆகுவது போலவே தோன்றியது.

ஆழ்வார்: 2007 ஆம் ஆண்டு அஜித், அசின் நடிப்பில் வெளியான ஆழ்வார் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்தப் படத்தை பார்க்க வந்தவர்களை அஜித் தாலாட்டி தூங்க வைத்து விட்டார். அந்த அளவிற்கு படம் செம போர் அடித்துவிட்டது. அஜித் படம் என்றாலே ஆக்சன் தான் என எதிர்பார்த்து வந்த ரசிகர்களை ஆழ்வார் நம்ப வைத்து மோசம் செய்து விட்டது.

Also Read: லியோ டீமில் இணைந்த அடுத்த 5-வது புது வில்லன்.. சர்ப்ரைஸ் கொடுத்தே திக்கு முக்காட வைக்கும் லோகேஷ்

சுறா: விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே படு தோல்வி படம் என்றால் அது சுறா தான். 2010 ஆம் ஆண்டு எஸ் பி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் அஜித்தின் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தைப் பார்த்த பிறகு, விஜய் எப்படி இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருப்பார் என்ற குழப்பம் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. ஏனென்றால் அந்த அளவிற்கு படத்தின் கதையில் சுவாரசியம் சுத்தமாகவே இல்லை. இந்தப் படத்தால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 80 முதல் 100 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்யின் படத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே காசு கொடுத்து தியேட்டரில் வந்து உறங்கி விட்டு சென்றனர்.

புலி: 2015 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான புலி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தைப் பார்க்கும்போது ஏதோ பொம்ம படத்தை பார்ப்பது போல் . படத்தில் தவளை போன்ற விலங்குகள் பேசுவது போன்றும், படத்தில் இடம்பெற்ற குள்ள மனிதர்கள் என கார்ட்டூன் படத்தில் இருப்பது போல் இந்த படத்தை எடுத்திருப்பார்கள். வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என விஜய் இந்த படத்தில் நடித்து படு தோல்வியை சந்தித்தார்.

Also Read: விஜய், அஜித்தை வைத்து ரஜினியோட அந்தப் படத்திற்கு அடி போடும் லோகேஷ்.. மெகா பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

இவ்வாறு இந்த 6 படங்கள் தான் அஜித் விஜய் நடிப்பில் வெளியான செம மொக்க படங்கள். அதிலும் விஜய்யின் 50வது படமான சுறா படம் தளபதியின் படு தோல்வி படமாக அமைந்தது.

- Advertisement -

Trending News