முதல் பாகம் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகம் குப்பையாக மாறிய 6 படங்கள்.. ஒரே பாணியில் வெளியாகி சலிப்பைத் தட்டிய சாட்டை 2

சினிமாவில் வெளியாக கூடிய ஒரு சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெறுகிறது. இதன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் வெளி வருகிறது.  ஆனால் மோசமான கதையால் முதல் பாகத்தின் வெற்றியையே டேமேஜ் செய்யும் அளவிற்கு இரண்டாம் பாகம் குப்பை கதையாகவே மாறி உள்ளது. அப்படியாக ரசிகர்கள் மத்தியில் சலிப்பைத் தட்டிய இரண்டாம் பாகத்திற்கான 6 படங்களை இங்கு காணலாம்.

சாமி 2 : இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் சாமி2. இதில் விக்ரம் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் விக்ரம் இதில் ராமசாமி ஐ பி எஸ் என்னும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2003 ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

Also Read: செம கதை அமைந்தும் விக்ரமுக்கு ப்ளாப்பான 5 படங்கள்.. மணிரத்தினம் படம் கூட ஓடாத பரிதாபம்

சண்டக்கோழி 2 : லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான திரைப்படம் சண்டக்கோழி 2. இதில் விஷால் உடன் வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் பகை உணர்விற்காக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதன் இரண்டு பாகங்களும் அமைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் பாகம் ஹிட்டான நிலையில் அதே பாணியில் இரண்டாம் பாகமும் வெளிவந்ததால்  ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.

கோலிசோடா 2 : விஜய் மில்டன் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கோலிசோடா 2. இப்படத்தில் ரோகிணி, சுபிக்க்ஷா, கிருஷ்ணா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இதில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதன் முதல் பாகம் கோயம்பேட்டில் இருக்கும் சிறுவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்தது. ஆனால் இதன் இரண்டாம் பாகம் பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளிவந்தது.

Also Read: விஷாலை நம்பி வாங்கிய பெரிய ஆப்பு.. பாட்ஷா பாய் போல் சுந்தர் சி திருப்பி கொடுத்த தரமான அடி

களவாணி 2 : சற்குணம் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் களவாணி 2. இதில் விமல் உடன் ஓவியா, விக்னேஷ் காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் முதல் பாகம்  நகைச்சுவை கலந்த காதல் கதையினை மையமாக வைத்து  வெளிவந்தது. ஆனால் அதன் இரண்டாம் பாகத்திலும் விமல் ஏமாற்று வேலைகளை செய்யும் அரசியல்வாதியாக நடித்திருப்பார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் சராசரியான விமர்சனங்களை மட்டுமே பெற்றது.

நாடோடிகள் 2 : சமுத்திரக்கனி இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாடோடிகள் 2. இதில் சசிகுமார் மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் இரண்டு பாகத்திலுமே உயிர் நண்பனின் காதலுக்காக தனது உயிரை பொருட்படுத்தாது உதவி செய்யும் நண்பர்களை மையமாக வைத்து படமானது அமைந்துள்ளது. ஆனால் இதன் இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.

சாட்டை 2 : எம் அன்பழகன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அடுத்த சாட்டை. இதில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் அதுல்யா ரவி,  கௌஷிக் சுந்தரம், யுவன் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதன் முதல் பாகம் பள்ளி மாணவர்களின் கல்வியினை மையமாக வைத்து வெளிவந்தது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் அப்படியே கல்லூரி மாணவர்களை வைத்து வெளிவந்தது. இதனால் இப்படம் ஒரே பாணியில் வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியது.

Also Read: அயோத்தியின் வெற்றியை தொடர்ந்து சசிகுமாருக்கு ரிலீஸ் ஆகும் 4 படங்கள்.. மீண்டும் சுக்கிர திசை ஆரம்பித்துவிட்டது