வயிறு குலுங்க சிரிக்க வைத்த விஜய்யின் 6 படங்கள்.. மறக்க முடியுமா நேசமணியுடன் அடித்த காமெடி

முன்னணி கதாநாயகனாக அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து தற்போது உச்சகட்ட நடிகராக இருப்பவர் தான் விஜய். இவர் நடித்த எத்தனையோ படங்கள் சீரியஸான கதாபாத்திரமாக இருந்திருந்தாலும் ஒரு சில படங்கள் காமெடியாகவும் அதில் இவரே மற்றவர்களை கலாய்க்கும் விதமாக நடித்திருப்பார். அப்படி விஜய் நடித்து வயிறு குலுங்க சிரிக்க வைத்த படங்களை பற்றி பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: கே செல்வ பாரதி இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு நினைத்தேன் வந்தாய் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ரம்பா, தேவயானி, சார்லி, ரஞ்சித் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.  இதில் விஜய்யின் கனவில் கண்ட பெண்ணே பார்த்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இதற்கு இடையில் தேவயானியை பொண்ணு பார்க்க வரும் பொழுது அவருடைய பாட்டி விஜய்யை போட்டோ எடுக்கும் விதமாக அனைத்து போட்டோக்களும் சொதப்பி எடுத்திருப்பார்.

மின்சார கண்ணா: கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு மின்சார கண்ணா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், மோனிகா, குஷ்பூ, ரம்பா, மணிவண்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் முழுவதுமே விஜய் மட்டுமே காமெடியில் கலக்கி இருப்பார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ரம்பாவுடன் இவர் சேர்ந்து குஷ்புவை கலாய்க்கும் ஒவ்வொரு சீனும் நகைச்சுவையாக தான் இருக்கும்.

Also read: கேரியர் பெஸ்டாக வெங்கட் பிரபு கொடுத்த 5 படங்கள்.. விஜய் மெர்சலான சூப்பர் ஹிட் படம்

பத்ரி: பிஏ அருண் பிரசாத் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு பத்ரி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், மோனல், ரியாஸ்கான், பூமிகா மற்றும் விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் வெவ்வேறு கோணத்தில் கேரக்டரை மாத்தி கொண்டு நடிப்பார். அதிலும் ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்துக்கிட்டு காலேஜ் வாசலில் இருந்து ஒவ்வொரு பெண்களையும் சீரியலின் பெயர்களை வைத்து கலாய்ப்பது மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.

வசீகரா: கே செல்வ பாரதி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வசீகரா திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சினேகா, வடிவேலு, நாசர், காயத்ரி ஜெயராமன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் கதாநாயகனாகவும் சிறந்த காமெடியனாகவும் நடித்திருப்பார். அதிலும் வடிவேல் உடன் சேர்ந்து இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. வடிவேலுக்கு மீசையே இல்லாததால் அதை பென்சிலில் வரைந்திருப்பார். அதை கலாய்க்கும் விதமாக விஜய் ஒவ்வொரு முறையும் வச்சு செய்திருப்பார்.

Also read: எளிதில் செட்டாகும் விஜய்.. பெரிய கேள்விக்குறியான விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம்

ஃபிரண்ட்ஸ் : இயக்குனர் சித்திக் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு ஃபிரண்ட்ஸ் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், சூர்யா, தேவயானி, விஜயலட்சுமி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய் இல் தக்கா சையா ஆசை இருக்கா என்று பார்க்கிற பெண்களை பின்னாடி கேட்டுக் கொண்டே அலைவார். அத்துடன் பெயிண்ட் அடிக்கும் பொழுது நேசமணி என்கிற வடிவேலுவுடன் செய்யும் காமெடியை பார்க்கும் பொழுது வயிறு வலிக்கிற அளவுக்கு சிரிக்க வைத்திருப்பார்.

சச்சின்: ஜான் மகேந்திரன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு சச்சின் திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் வடிவேலு காலேஜ் படிக்கும் இளைஞராக நடித்து செய்யும் அழிச்சாட்டியத்தை கலாய்க்கும் விதமாக ஒவ்வொரு முறையும் விஜய் இவரை நக்கல் அடித்திருப்பார். அதிலும் ஜெனிலியா உடன் வடிவேலு கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கும் நையாண்டி உடன் நகைச்சுவையை காட்டி இருப்பார்.

Also read: தோல்வி இல்லாமல் அஜித், விஜய்யை இயக்கிய ஏழு இயக்குனர்கள்.. 8-வதாக வந்து சேர்ந்த வெங்கட் பிரபு

Sharing Is Caring:

அதிகம் படித்தவை