ஒரே சமயத்தில் ஹீரோவாக நடித்த கலக்கி கொண்டிருக்கும் 6 தந்தை- மகன்கள்.. பையனுக்கு பயங்கர டஃப் கொடுக்கும் சியான்

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் இன்னொரு நடிகருக்கு போட்டியாக உருவெடுப்பார்கள். ஆனால் தந்தைகளே தங்கள் மகன்களுக்கு போட்டியாக நடித்து அசத்தியுள்ளனர். அதிலும் விக்ரம் தன்னுடைய மகன் துருவ் விக்ரமுக்கே பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

சிரஞ்சீவி- ராம்சரண்: தெலுங்கு திரை உலகில் சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரண் இருவரும் ஒரே சமயத்தில் ஹீரோவாக நடித்து கலக்கிக் கொண்டு இருக்கின்றனர். அதிலும் இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு வெளியான ஆச்சார்யா படத்தில் இணைந்து நடித்து மிரட்டு இருப்பார்கள். இதில் இருவரையும் பார்த்தால் தந்தை மகன் என சொல்ல முடியாது. அந்த அளவிற்கு மகனுடன் ஈடு கொடுத்து சிரஞ்சீவி நடித்த அசத்தியிருப்பார்.

மம்முட்டி- துல்கர் சல்மான்: கடந்த 40 வருடங்களாக மலையாள திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மம்முட்டி. இவரது மகன் துல்கர் சல்மான் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். என்னதான் மகன் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தாலும் மம்முட்டி தொடர்ந்து தன்னுடைய பையனுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக பின்னி பெடல் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: சப்போட்டிங் கேரக்டரில் அஜித் நடித்த 5 படங்கள்.. தளபதிக்கு உயிர் நண்பராக இருந்த ஏகே

சத்யராஜ்- சிபிராஜ்: வில்லனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து அதன் பிறகு கதாநாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த சத்யராஜ், அவருடைய மகன் சிபிராஜ் உடன் இணைந்து ‘வெற்றிவேல் சக்திவேல்’ என்ற படத்தில் இரட்டைக் கதாநாயகர்களாக நடித்தனர். மேலும் சத்யராஜ் ‘ஜாக்சன் துரை’ என்ற திரைப்படத்திலும் தன்னுடைய மகன் சிபிராஜ் உடன் இணைந்து நடித்தார்.

எஸ்ஏ சந்திரசேகர்- விஜய்: கோலிவுட்டிங் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கிறார் என்றால் அதற்கு முழு காரணம் அவருடைய உழைப்பு ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் தந்தை எஸ்ஏ சந்திரசேகரின் விடாமுயற்சி தான். அவர்தான் விஜய்யின் ஆரம்ப கால படங்களை எல்லாம் இயக்கி, வரிசையாக தோல்வியை சந்தித்தாலும் தற்போது விஜய் உச்ச நிலைக்கு வரும் வரை உயர்த்தி விட்டு இருக்கிறார்.

முதலில் இயக்குனராக பல படங்களை இயக்கிய எஸ்ஏ சந்திரசேகர் இப்போது நடிப்பில் ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறார். அதிலும் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இதே சமயத்தில் டிராஃபிக் ராமசாமி என்ற படத்தில் நடித்து கலக்கினார்.

Also Read: விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

விக்ரம்- துருவ் விக்ரம்: 90களில் இருந்து இப்போது வரை தன்னுடைய படங்களில் ஏதாவது வெரைட்டி காட்ட வேண்டும் என வெறித்தனமாக நடித்துக் கொண்டிருக்கும் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக கலக்கி கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில் தான் அவரது மகன் துருவ் விக்ரமும் இளம் கதாநாயகனாக அடுத்தடுத்த படங்களின் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் தன்னுடைய தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்து அசத்திருப்பார்கள்.

ஜெயராம்- காளிதாஸ் ஜெயராம்: 90களில் கதாநாயகனாக கலக்கிக் கொண்டிருந்த ஜெயராம் இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது மகன் காளிதாஸ் ஜெயராமன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக உருவெடுத்துள்ளார். அதிலும் சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் ஜெயராம் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள்.

Also Read: புது அவதாரம் எடுத்திருக்கும் விஜய்யின் வாரிசு.. அப்ப எஸ்ஏசி சொன்னதெல்லாம் உண்மைதான் போல

இவ்வாறு இந்த 6 பிரபலங்கள்தான் ஒரே சமயத்தில் தந்தை மகன்கள் இருவரும் சினிமாவில் நடித்து கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் விக்ரம் மற்ற நடிகர்களை விட தன்னுடைய மகனுக்கு பயங்கர டஃப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.