சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

முதல் படத்திலேயே வெற்றி கண்ட 6 இயக்குனர்கள்.. விக்ரமை பைத்தியமாக அலையவிட்டு ஹிட் கொடுத்த பாலா

சினிமா துறையை பொறுத்தவரையிலும் இயக்குனர்கள் தங்களின் முதல் படங்களிலேயே ஹிட் கொடுக்க மிகவும் போராடி வருகின்றனர்.  ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே தாங்கள் இயக்கிய முதல் படத்திலேயே வெற்றி பெறும் வாய்ப்பானது அமைந்துள்ளது. அப்படியாக தாங்கள் இயக்கிய முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த 6 இயக்குனர்களை இங்கு காணலாம்.

சங்கர்: 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். இதில் அர்ஜுன் உடன் மதுபாலா, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இப்படத்தில் பணத்தை பதுக்கி வைத்துள்ள அரசியல்வாதிகளிடமிருந்து கொள்ளையடித்து ஏழை மக்களுக்கு உதவி செய்வதை மையமாக வைத்து படமானது அமைந்துள்ளது. அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம்  மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூல் சாதனை படைத்தது.

Also Read: சங்கரை மதிக்காமல் அலையவிட்ட 4 ஹீரோக்கள்.. சினிமா கேரியரையே தொலைத்த ரசகுல்லா ஹீரோ

கௌதம் மேனன்: 2001 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் உருவான திரைப்படம் மின்னலே. இப்படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இதில் மாதவன் உடன் அப்பாஸ், ரீமாசென் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் காதல் கதையை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றதோடு வணிக ரீதியாக பிரம்மாண்டமான வெற்றி பெற்றது.

செல்வராகவன்: 2003 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் காதல் கொண்டேன். இப்படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்கியிருந்தார். இதில் தனுஷ் உடன் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும்  இந்தப் படமானது மிக அழகான காதல் கதையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம் ஆகும். அதுமட்டுமல்லாமல் தனுஷிற்கு சினிமா துறையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படமாகவும் அமைந்தது. இதனைத் தொடர்ந்து இப்படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: 5 வருடங்களாக கடன்காரர்களின் பிடியில் இருந்த ரொமான்டிக் இயக்குனர்.. கடைசியில் விக்ரமுக்கு வச்ச செக்

ஏ ஆர் முருகதாஸ்: அஜித் நடிப்பில் உருவான 2001 ஆம் ஆண்டு வெளியான  திரைப்படம் தீனா. இப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார். மேலும் இதில் அஜித் உடன் லைலா ஜோடி சேர்ந்து நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து இப்படத்தில்  இரக்க குணமுடைய ரவுடியின் கதையினை மையமாக வைத்து இப்படமானது  அமைந்துள்ளது. படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது. அதுமட்டுமல்லாமல் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அட்லி: 2013 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் உருவான திரைப்படம் ராஜா ராணி. இப்படத்தை இயக்குனர் அட்லி  இயக்கியுள்ளார். மேலும் இதில் ஆர்யா உடன் நயன்தாரா, ஜெய், நஸ்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து காதல் தோல்வியோடு வாழ்க்கை முடிவதில்லை என்பதை மிக அழகாக உணர்த்தும் விதமாக இப்படமானது அமைந்துள்ளது. மேலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

பாலா: 1999 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் சேது. இப்படத்தை இயக்குனர் பாலா இயக்கியிருந்தார். மேலும் இதில் விக்ரம் உடன் அபிதா, சிவக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ஹீரோ தனது ஆழ் மனதில் உள்ள காதலை எவ்வாறு கதையின் நாயகிக்கு புரிய வைப்பார் என்பதை, மையமாக வைத்து படமானது அமைந்துள்ளது. அதிலும் தனது காதலுக்காக விக்ரம் பைத்தியமாகவே மாறி இருப்பார். மேலும் சேது திரைப்படத்திற்கு சிறந்த வட்டார மொழி திரைப்படம் என சில்வர் லோட்டஸ் விருது வழங்கப்பட்டது.

Also Read: அஜித் அறிமுகப்படுத்திய 6 இயக்குனர்கள்.. திருப்புமுனையை ஏற்படுத்திய ஏ ஆர் முருகதாஸ்

- Advertisement -

Trending News