இந்த வருடம் ஏமாற்றத்தை தந்த 6 இயக்குனர்கள்.. ஒரே படத்தை பல வருடமாக உருட்டும் அட்லீ

2022 ஆம் ஆண்டு பல புதுமுக இயக்குனர்கள் அறிமுகமாகியுள்ளனர். அதே போல் பல இளம் இயக்குனர்களும் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயமான இயக்குனர்கள் சிலர் இந்த வருடம் ஏமாற்றத்தை தந்துள்ளனர். அந்த 6 இயக்குனர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

ஷங்கர் : ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு இயக்குனர் ஷங்கரின் படங்கள் தற்போது வரை வெளியாகவில்லை. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டாவது இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் 15 வது படம் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : பிகினிங் படத்தை பார்த்தே ஆக வேண்டும்.. ஆர்வத்தில் லோகேஷ் கனகராஜ், ஷங்கர்

ஏ ஆர் முருகதாஸ் : இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ரஜினியின் தர்பார் படத்தை இயக்கினார். அதன் பின்பு அவரது இயக்கத்தில் எந்த படமுமே வெளியாகவில்லை. இதைத்தொடர்ந்து விஜய் படத்தை இயக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. ஆனால் ஏ ஆர் முருகதாஸ் பாலிவுட் பக்கம் சென்று உள்ளாராம்.

அட்லீ : கடந்த 2019 ஆம் ஆண்டு விஜயின் பிகில் படத்தை தான் கடைசியாக அட்லி இயக்கியிருந்தார். கடந்த சில வருடங்களாக ஷாருக்கானின் ஜவான் படத்தை அட்லீ உருட்டி வருகிறார். இப்போது வரை இந்த படத்தை முடித்த பாடு இல்லை. அடுத்தாண்டாவது இந்த படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் அவரது ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : அட்லீ மீது மன வருத்தத்தில் இருக்கும் ஷாருக்கான்.. காண்டாகி கண்டிஷன் போட்ட தயாரிப்பாளர்

வெங்கட் பிரபு : வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. ஆனால் இந்த ஆண்டு அசோக் செல்வனின் மன்மத லீலை படம் வெளியானது. இந்த படம் தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக நாகச் சைதன்யாவை வைத்து வெங்கட் பிரபு ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

பாலா : இயக்குனர் பாலா கடந்த 2020 ஆம் ஆண்டு வர்மா என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் சூர்யா உடன் கைகோர்த்து வணங்கான் படத்தை இயக்கி வந்த நிலையில் இப்போது இந்த படத்தில் இருந்து சூர்யா விலகி உள்ளார். ஆகையால் அதர்வாவை வைத்து மீண்டும் வணங்கான் படத்தை பாலா இயக்க உள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

கார்த்திக் சுப்புராஜ் : ஜிகர்தண்டா போன்ற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இந்த வருடம் ஜகமே தந்திரம், மகான் என தோல்வி படங்கள் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தார். ஆனால் அடுத்த ஆண்டு ஜிகர்தண்டா 2 படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

Also Read : இறுதி சடங்கை செய்ய விடாமல் கொடுமைப்படுத்திய பாலா.. வெறுத்து போய் சாபம் கொடுத்த தயாரிப்பாளர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்