நேரம் சரியில்லாமல் பல வருடம் படங்களே இல்லாத 6 இயக்குனர்கள்.. இதுல சங்கர் நிலைமை ரொம்ப மோசம்

6 directors of bad timing: எத்தனையோ இயக்குனர்கள் இருந்தாலும் சில இயக்குனர்களின் படங்கள் மட்டும் அதிக அளவில் வெற்றி பெற்று மக்களிடம் ரீச் ஆகிவிடும். அதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் திறமையும், விடாமுயற்சியும் தான் காரணமாக இருக்கும்.

ஆனால் அதே இயக்குனர்களுக்கு நேரம் சரியில்லாமல் இருப்பதால் பல வருடங்களாக படங்கள் எதுவும் தொடர்ந்து வராமல் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்கள் யார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

பாலா: இவர் எடுக்கக்கூடிய படங்கள் எதார்த்தத்தையும் தாண்டி, நான் எடுத்தால் கண்டிப்பாக விருது வாங்கும் அளவிற்கு வெற்றி பெறும் என்று தன்னம்பிக்கையுடன் படம் எடுக்கக் கூடியவர். ஆனால் இவரிடம் இருக்கும் மிகப்பெரிய மைனஸ் இவருக்கு ஏற்ற மாதிரி நடிப்பு வரவேண்டும் என்பதற்காக படத்தில் நடிக்கும் அனைத்து ஆர்டிஸ்ட்களையும் வச்சு செய்வதுதான்.

அதனாலையே இவரிடம் நடிப்பதற்கு எந்த முன்னணி ஹீரோக்களும் தயாராக இல்லை. அந்த வகையில் 4 வருடங்கள் ஆகியும் இன்னும் இவருடைய படங்கள் வெளிவரவில்லை.

மிஸ்கின்: புரியாத கதையாகவும், என்ன நடக்கிறது என்று மர்மமாகவே கொண்டு போகும் அளவிற்கு திரில்லான இயக்குனர் என்றே சொல்லலாம். இப்படி தொடர்ந்து படங்களை இயக்கி வந்த இவர் நடிகர் விஷாலுக்கும் இவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் துப்பறிவாளன் இரண்டாம் படத்தில் இருந்து விலகி விட்டார். இப்பொழுது படம் இயக்குவதை தாண்டி நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தும் அளவிற்கு இவருடன் நிலைமை மாறிவிட்டது.

எச் வினோத்: இவர் எந்த இயக்குனர் என்று தெரியாத பொழுது வெளிவந்த படங்கள் சதுரவேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்ததாலோ என்னமோ இரண்டு படமே மக்களிடம் மறக்க முடியாத படமாக மாறிவிட்டது.

அதன் பின் அஜித்துக்கு தொடர்ந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கினார். அதன் பின் கமலை வைத்து எடுக்கப் போவதாக செய்திகள் மட்டும் பரவிய நிலையில் இன்னும் வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராமல் இருக்கிறது.

இரண்டு படங்களால் தத்தளித்து வரும் சங்கர்

ஷங்கர்: அதிக பட்ஜெட்டுகளை வைத்து பிரம்மாண்டமான படங்களை எடுத்து தரமான சம்பவத்தை செய்யக்கூடியவர் தான் இயக்குனர் சங்கர். இவர் எடுத்த படங்கள் நிச்சயம் வெற்றி பெற்றுவிடும். அந்த அளவிற்கு சிறந்த இயக்குனர் என்றே சொல்லலாம்.

ஆனால் தற்போது கமலை வைத்து எடுத்த இந்தியன் 2 படமும் தெலுங்கில் ராம்சரணை வைத்து உருவாக்கி வரும் கேம் சேஞ்சர் படமும் வெளியிட முடியாமல் தவித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நேரம் சரியில்லாததால் நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது.

செல்வராகவன்: காதல் மற்றும் ரொமாண்டிக் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் படங்களை கொடுத்து வெற்றி பெற்றவர் தான் செல்வராகவன். ஆனால் சமீப காலமாக இவர் எடுக்கும் படங்கள் எதுவுமே நல்லா இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெயிலியர் ஆகிக்கொண்டே வருகிறார். அந்த வகையில் இப்பொழுது நடிப்பு பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்தி வருகிறார்.

விக்னேஷ் சிவன்: சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஆகிய நிலையில் ஐந்து படங்களை மட்டுமே இயக்கி இருக்கிறார். ஆனாலும் முன்னணி நடிகர்களின் கவனத்தைப் பெற்று அஜித்தை வைத்து படம் எடுக்கும் அளவிற்கு போய்விட்டார்.

ஆனால் இவருடைய போதாத காலம் அஜித் இவரை வேண்டாம் என்று கழட்டிவிட்டார். தற்போது பிரதீப்பை வைத்து LIC என்ற படத்தை எடுத்து வருகிறார். ஆனால் இப்படம் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு சிக்கலை பார்த்து வருகிறது. இப்படி இந்த ஆறு இயக்குனர்களுக்கும் நல்ல திறமை இருந்தாலும் கொஞ்சம் நேரம் சரியில்லாததால் போராடி வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்