வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற 6 சினிமா பிரபலங்கள்.. சத்தமே இல்லாமல் காய் நகர்த்திய நயன்தாரா

மும்பு கருவுற முடியாத பெண்கள் மட்டும் குழந்தை பெற்றுக் கொள்ள வாடகைத்தாய் முறையை பின்பற்றினர். ஆனால் சினிமா பிரபலங்கள் தங்களது இளமை மங்கிவிடக்கூடாது, மார்க்கெட்டில் டாப் இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதுவரை 6 பேர் வாடகைத்தாய் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றனர். அதிலும் இந்த வேலையை சைலன்டாக நயன்தாரா பார்த்துவிட்டார்.

பிரீத்தி சிந்தா: பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் மணிரத்னம் இயக்கிய ‘தில் சே’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் கதாநாயகியாக நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த படம் தமிழில் உயிரே என்ற பெயரில் வெளியாகி தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்.

இவர் 2016ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த நீண்டகால நண்பர் ஜீன் குட் இனாஃப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவருக்கு வாடகைத் தாய் மூலம் கடந்த ஆண்டு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததை தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

ஷில்பா ஷெட்டி: பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜ் குந்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு 2012 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு ஷில்பா ஷெட்டி 2020 ஆம் ஆண்டில் வாடகை தாய் மூலமாக பெண் குழந்தைக்குத் தாயானார். தொடர்ந்து அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால் இரண்டாவது குழந்தை வாடகை தாய் மூலம் பெரும் முடிவுக்கு வந்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

Also Read: பணமும், அழகும் தான் எங்களுக்கு முக்கியம்.. தமிழ் கலாச்சாரத்தை அழிக்கும் விக்கி-நயன்தாரா ஜோடி

ஷாருக்கான்: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்-கௌரி தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு மகளும், மகனும் இருக்கும் நிலையில் மூன்றாவதாக வாடகைத்தாய் மூலம் ஒரு  ஆண் குழந்தை கடந்த 2013 ஆம் ஆண்டு பிறந்தது.

சன்னி லியோன்: பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் சன்னி லியோனும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார். ஏற்கனவே இவர் கடந்த 2014ஆம் ஆண்டு பெண் குழந்தையை தத்தெடுத்த நிலையில், அதன் பிறகு வாடகைத் தாய் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு இரட்டை ஆண் குழந்தைக்கு தாயானார்.

கரண் ஜோஹர்: பாலிவுட்டின் பிரபல இயக்குனரான இவர், வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார்.

Also Read: 4 மாதத்திலேயே இரட்டை குழந்தைக்கு தாயான நயன்தாரா.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்

நயன்தாரா: விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் திருமணம் நடந்து ஆறு மாதம் கூட முழுமையாக ஆகவில்லை. இன்னிலையில் இவர்களுக்கு இரட்டைக் குழந்தை பிறந்திருக்கிறது என கேள்விப்பட்டதும் பலரும் ஷாக் ஆகி உள்ளனர். அதாவது நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவருக்கும் வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்திருக்கிறது.

இவர்கள் இருவரும் அந்தக் குழந்தைகளின் காலில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் நேற்று வெளியாகி தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்திய திரையுலகில் பல பிரபலங்கள் வாடகை தாய் மூலம் பெற்றிருந்த நிலையில், முதல் முதலாக தமிழ் சினிமாவில் இப்படி குழந்தை பெறும் முதல் தம்பதி நயன்தாரா -விக்னேஷ் சிவன் இருவரும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வாடகை தாய் மூலம் குழந்தைகளை பெற்றெடுப்பது இந்திய சினிமா பிரபலங்களுக்கு பரிச்சயமானது என்றாலும், தமிழ் சினிமாவை பொறுத்த வரை நயன்தாரா அதையே பின்பற்றி சைலண்டாக வேலையை செய்திருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது.

Also Read: நயன்தாராவை கைது செய்ய வாய்ப்பு இருக்கா? மறைமுகமாக போட்டுக்கொடுத்த கஸ்தூரி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்