வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

90ஸ் இளசுகளை இப்ப வரை கிரங்கடிக்கும் 6 ஆன்ட்டிஸ் நடிகைகள்.. ஜொள்ளு விட்டு திரிந்த கமல், அர்ஜுன்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்ததன் மூலம் இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் சில நடிகைகள் நீங்கா இடம் பிடித்த வருகின்றனர். அதிலும் இவர்களது அழகின் மூலம் இளசுகளை மட்டுமல்லாமல் இவர்களுடன் சேர்ந்து நடித்த நடிகர்களையும் கூட ஜொள்ளு விட வைத்த நடிகைகளாகவே வலம் வந்தனர். அப்படியாக 90ஸ் இளசுகளை இன்று வரையிலும் கிரங்கடிக்கும் 6 ஆன்ட்டிஸ் நடிகைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

மனிஷா கொய்ராலா: நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட நடிகை தான் மனிஷா கொய்ராலா. தமிழில் பாம்பே, முதல்வன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, நேபாளி, மலையாளம், கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தன் நடிப்பின் மூலம் கமல், அர்ஜுனையே கிரங்கடித்து இருப்பார் என்றே சொல்லலாம். 

Also Read: 7 படங்களில் ஐந்து சூப்பர் ஹிட்.. கேடு கெட்ட பழக்கத்தால் கேரியரை தொலைத்த மனிஷா கொய்ராலா!

தபு: சினிமாவில் மாடல் அழகியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை தபு. மேலும் ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் காதல் தேசம் எனும் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகையாக வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து இருவர், தாயின் மணிக்கொடி,  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற  திரைப்படங்களிலும் நடித்திருந்தார். அதிலும் அஜித் உடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம்  இன்றைய ரசிகர்களின் மத்தியில் பிடித்தமான நடிகையாகவே இருந்து வருகிறார்.

ஐஸ்வர்யா ராய்: உலக அழகியாக ரசிகர்கள் மத்தியில்  நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து  ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.  அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இவர் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்றைய தலைமுறை இளைஞர்களையும் கூட தனது வசீகரத்தால் கிரங்கடித்து வருகிறார்.

Also Read: 10 வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த 5 ஹீரோயின்கள்.. இன்றுவரை அடிச்சிக்கவே முடியாத ஐஸ்வர்யா ராய்

கஜோல்: ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான மின்சார கனவு என்னும் திரைப்படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமான நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை கஜோல். அதிலும் இப்படத்தில் நடித்ததன் மூலம் இன்றைய இளசுகள் மத்தியிலும் கிரஷ் ஆக இருந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ப்ரீத்தி ஜிந்தா: பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு போன்ற பலமொழி திரைப்படங்களிலும்  நடித்து அதிக அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து தமிழில் இனிய முடிவு, காதல் வெண்ணிலா, இவன் ஒரு துணிச்சல்காரன் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அதிலும் தனது பதுமை மிகுந்த அழகு மற்றும் நடிப்பின் மூலமும் இன்றைய இளசுகளையும் உருக வைத்திருக்கிறார்.

சுஷ்மிதா சென்: பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து பிரபலமானவர்தான் சுஷ்மிதா சென். அதிலும் இவர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான தஸ்தக் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் ரட்சகன் என்னும் திரைப்படத்தில் நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமான நடிகையாக வலம் வந்தார். அதிலும் இவர் இளசுகளை மட்டுமல்லாமல் நடிகர்களையும் கூட ஜொள்ளு விட வைத்த நடிகை ஆகவே இருந்து வருகிறார். 

Also Read: செல்வராகவனின் சர்ச்சையை தொடர்ந்து, 24 வருடங்களுக்கு பின் ரட்சகன் பட பட்ஜெட்டை உடைத்த இயக்குனர்!

- Advertisement -

Trending News