தொடர் தோல்வியால் பட வாய்ப்பு இல்லாமல் போன 6 நடிகைகள்.. இதுல முக்கால்வாசி விஜய்க்கு ஜோடியாம்

6 Actress lost opportunity: சினிமாவில் நடிகைகளுக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு தொடர்ந்து புதுப்புது நடிகைகள் என்டரி கொடுத்து வருகிறார்கள். அதனாலேயே ஒரு படத்தின் மூலம் தோல்வி அடைந்து விட்டால் அப்படியே அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். அப்படி தொடர் தோல்வியால் பட வாய்ப்புகளை இழந்து தவிக்கும் நடிகைகளை பற்றி பார்க்கலாம். முக்கியமாக இந்த நடிகைகளில் முக்கால்வாசி பேர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர்கள்.

ஸ்ருதிஹாசன்: தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் பெருசாக சொல்லும் படியாக மக்களிடம் இருந்து எந்தவித வரவேற்பையும் பெற முடியவில்லை. முக்கியமாக இவருடைய அப்பா கமலஹாசன் நடிப்பில் பாதி கூட இவரிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு தான் இவர் நடித்த படங்களான புலி, லாபம், பூஜை போன்ற அனைத்து படங்களிலும் இவருடைய கதாபாத்திரம் எடுப்படாமல் போய்விட்டது. அதனாலயே அக்கட தேசத்திற்கு போய்விட்டார்.

மாளவிகா மோகன்: மலையாள ஹீரோயினாக இருந்தாலும் தமிழில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் தான். இதனைத் தொடர்ந்து மாஸ்டர், மாறன், கிறிஸ்டி போன்ற படங்களில் தொடர்ந்து தமிழில் நடித்து வந்தார். ஆனாலும் இவர் நடித்த படங்கள் எதுவும் இவருக்கு கை கொடுக்காமல் மக்களிடம் இவருக்கான இடத்தை பிடிக்க முடியாமல் போய்விட்டது. அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

பூஜா ஹெக்டே: அக்கட தேசத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த பூஜா ஹெக்டே சமீபத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார். எப்படியாவது விஜய்க்கு ஜோடியாக சேர்ந்து தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி விட வேண்டும் என்ற ஆசையில் வந்தவருக்கு கடைசியில் ஏமாற்றமாக போய்விட்டது. அதாவது இந்த படமே இவருக்கு கரும்புள்ளியாக அமைந்தது. அதற்கு காரணம் இந்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது தான். அதனால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.

நிக்கி அகர்வால்: தமிழ் சினிமாவில் சிம்புவுடன் ஈஸ்வரன் மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி போன்ற இரண்டு படங்களில் நடித்து பரிச்சயமானார். அடுத்ததாக உதயநிதிக்கு ஜோடியாக கலக தலைவன் படத்திலும் நடித்தார். ஆனாலும் இவரது நடிப்பு பெருசாக ரசிகர்களை கவரவில்லை. அதனால் அடுத்து இவருக்கு எந்த வாய்ப்பும் நடிப்பதற்கு வராமல் போய்விட்டது.

வரலட்சுமி சரத்குமார்: பொதுவாக இவர்  நடிக்கக்கூடிய கேரக்டர்கள் ரொம்பவே துணிச்சலாகவும், உண்மையான விஷயங்களை நடிப்பதிலும் ஆர்வம் காட்டக் கூடியவர். அப்படிப்பட்ட இவருடைய நடிப்பு மக்களிடம் மிகவும் வரவேற்கப்பட்டது. ஆனாலும் ஹீரோயினாக இவரை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் நெகட்டிவ் கேரக்டரிலும், குணச்சித்திர கதாபாத்திரம் தான் இவருக்கு தொடர்ந்து வருகிறது.

அனுஷ்கா: இவருடைய அழகும் நடிப்பும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து இழுக்கப்பட்டது. அதனால் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று வெற்றி படங்களை கொடுத்து வந்தார். அப்படிப்பட்ட இவர் 2018 ஆம் ஆண்டு பாகமதி படத்தில் நடித்ததால் இவருடைய மொத்த மார்க்கெட்டும் காலி ஆகிவிட்டது. இதன் பிறகு இவருக்கு தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது.