வாழவைத்த முதலாளிகளை தூக்கி எறிந்த 6 ஹீரோக்கள்.. மற்ற மொழி தயாரிப்பாளர்களை தூக்கி விடும் விஜய், சூர்யா

6 Actors Who give chance to Other Language producers: தமிழ் நெஞ்சங்களே! என் உயிரினும் மேலான தமிழ் மக்களே! என் உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு, என மேடைகளில் சொற்பொழிவு ஆத்து! ஆத்து! என்று ஆற்றினாலும், படங்கள் அடுத்த மாநிலங்களில் வியாபாரம் ஆக வேண்டும் என்றாலும், நமக்கு வருமானம் வரவேண்டும் என்றாலும் தமிழர்களை மறந்து விடுகின்றனர் நம் தமிழ் நடிகர்கள் சிலர்,

சிவகார்த்திகேயன்: அமரன் படத்திற்கு பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள திரைப்படம் எஸ் கே 23. தனது வளர்ச்சிக்கு சப்போர்ட் செய்பவர்கள் யாராக இருந்தாலும் முன்னுரிமை கொடுக்கும் சிவா,

அவர் தெலுங்கு தயாரிப்பாளர் என்றால் மாட்டேன் என்றா சொல்லப் போகிறார். எஸ்கே 23க்காக இவர் கேட்கும் அதிகப்படியான சம்பளத்திற்கு ஓகே சொன்னதால் இவரும் தெலுங்கு தயாரிப்பாளர் என். வி. பிரசாத்திற்கு ஓகே சொல்லிவிட்டார். 

விஜய்: அரசியலில் குதித்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற காத்திருக்கும் நம்ம தளபதி நடிக்கும் கடைசி படமான விஜய் 69 படத்தின் ப்ரொடியூசர் யார் என்றால், RRR படத்தை தயாரித்த DVV என்டர்டைன்மென்ட். இவர்கள்தான் தளபதியின் 250 கோடி வரையிலான சம்பளத்திற்கு ஓகே சொல்லியதாம். 

அஜித்: விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா, ஒரு மூணு படம் சேர்ந்து பண்ணலாமா என்று வலையை விரிக்க, முடியவே முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டாராம் அஜித். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இணையும் அடுத்த ப்ராஜெக்ட் “குட் பேட் அக்லி” படத்திற்கு தெலுங்கு பட நிறுவனம் மைத்திரி மூவி மேக்கர்ஸ் யை தேர்ந்தெடுத்துள்ளார் அஜித். 

சூர்யா: சிறுத்தை சிவாவின் மிரட்டலான இயக்கத்தில் வெளிவர உள்ளது கங்குவா. 38 மொழிகளிலும் தயாராகி பான் இந்தியா மூவியாக ரெடியாகி உள்ள இதனை தெலுங்கு பட நிறுவனம் UV கிரியேஷன்ஸ் தயாரித்து உள்ளது.

ஏழாம் அறிவு திரைப்படத்தில் “மொழிப் பற்று”,” இனப்பற்று” குறித்து ஏதோ புகழ்ந்து பேசியதாக ஞாபகம். 

தனுஷ்: தனுஷ் இப்போது அல்ல, எப்போதோ பான் இந்தியா ஸ்டார் ஆக மாறிவிட்டார். அவரை தமிழர் என்ற கண் கொண்டு நோக்காது, இந்தியர் என்று பரந்த மனப்பான்மையுடன் நோக்க வேண்டும்.

தற்போதும் தெலுங்கு  தயாரிப்பாளர் புஷ்கர் ராம் மோகன் ராவ் தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்லா இயக்கத்தில் குபேராவில் நடித்து வருகிறார்.

விக்ரம்: பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வரும் விக்ரம், கடந்த ஆண்டு வெளியான சித்தா படத்தின் வெற்றி இயக்குனர் எஸ் யூ அருண்குமார் உடன் விக்ரம் 62 படத்தில் இணைந்துள்ளார். 

மலையாள தயாரிப்பு நிறுவனம் ரியா சிபுவின் ஹெச் ஆர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இதில் தேசிய விருது வென்ற மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இணைந்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்