பைக் மோகத்தால் ஊரை சுற்றும் 6 நடிகர்கள்.. அஜித்துக்கே டஃப் கொடுக்கும் வயதான காமெடியன்

சினிமா துறையில் உள்ள பிரபலங்களுக்கு பல்வேறு துறையில் ஈடுபாடு அதிகமாக இருக்கும். அந்த வகையில் கோலிவுட் சினிமாவில் சிலர் பைக் ரேஸில் அதீத பிரியம் கொண்டவராக உள்ளனர். அவ்வாறு பைக் கிரஷினால் ஊரை சுற்றும் 6 நடிகர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.

அஜித் : அஜித் பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஈடுபாடு உடையவர். தற்போது கூட பல நாடுகளில் பைக்கில் சுற்று பயணம் மேற்கொண்டு இருந்தார். தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தை முடித்த கையோடு பைக்கில் வேர்ல்ட் டூர் செல்ல இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.

Also Read :கமலுடன் கூட்டணி சேர்ந்த அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்.. கைமாறிய பல கோடி பணம்

அருண் விஜய் : என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார். அஜித்தை போலவே இவருக்கும் பைக், கார் ரேஸ் மீது அதிக ஈடுபாடு உள்ளது. இவரும் தனது ஓய்வு நேரங்களில் உடற்பயிற்சி செய்வது அல்லது பைக்கை எடுத்துக்கொண்டு ஊரை சுற்றுவதை பொழுது போக்காக வைத்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் : இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் லடாக்கில் பைக்கில் பயணம் மேற்கொண்டு இருப்பார். இது பற்றி அவர் கூறுகையில் லடாக்கில் சவாரி செய்யும்போது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். மேலும் பைக் கிரஷ்ஷால் நிறைய விதமான பைக்கின் மீது தனக்கு ஈடுபாடு உள்ளதாக ஹரிஷ் கல்யான்.

Also Read :மணமேடையில் மனைவிக்கு முத்தமிட்ட ஹரிஷ் கல்யாண்.. இணையத்தை அலங்கரிக்கும் திருமண புகைப்படங்கள்

மாதவன் : சாக்லேட் பாய் மாதவன் நிறைய விலை உயர்ந்த பைக் வைத்துள்ளார். மாதவன் பாலைவனங்களில் பைக் ரேஸ் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவருக்கும் பைக் மீது ஒரு அதீத காதல் எப்போதுமே இருந்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பைக் பயணம் செல்வது மாதவனுக்கு மிகவும் பிடிக்குமாம்.

ஆர்யா : நடிகர் ஆர்யா சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். ஆர்யா மிகுந்த உடற்பயிற்சி செய்வது, சைக்கிள் ஓட்டுவது ஆகியவற்றை பொழுது போக்காக வைத்துள்ளார். மேலும் ஒரு முறை ஆர்யா சைக்கிளிலேயே 100 கிலோமீட்டர் ரைடு சென்று வந்தார்.

எம் எஸ் பாஸ்கர் : பைக் ரேஸில் அஜித்திற்கு டஃப் கொடுக்கும் ஆல் ரவுண்டர் எம் எஸ் பாஸ்கர். இவருக்கும் பைக்கை மீது அதிக ஈடுபாடு உண்டு. மேலும் அவரது மகள் ஒரு முறை ராயல் என்ஃபீல்டு பைக் தனது தந்தைக்கு அன்பளிப்பாக கொடுத்து இருந்தார். அந்த அளவுக்கு பைக் மீது கொள்ளை பிரியம் கொண்டவர் எம் எஸ் பாஸ்கர்.

Also Read :துணை கதாபாத்திரத்தில் ஹீரோக்களை மிஞ்சிய 6 நடிகர்கள்.. 64 வயதிலும் சாதித்துக் காட்டிய MS பாஸ்கர்

- Advertisement -