பேத்தி வயது நடிகையை படுக்கைக்கு அழைத்த 51 வயது நடிகர்.. டபுள் மீனிங் பேச்சு புரிந்தபின் எடுத்த ஓட்டம்

கொஞ்சம்கூட கூச்ச நாச்சம் இல்லாமல் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் பெருகிவருகிறது. அதிலும் வயது வித்தியாசம் இல்லாமல் அசிங்கமாக நடந்து கொள்ளும் மனிதர்கள் போல் உள்ள மிருகங்கள் எல்லா துறையிலும் இருந்து கேவலப்படுத்தி வருகின்றார்கள்.

சினிமா துறையில் இந்த MeeToo புகார் கடந்த ஐந்து ஆண்டுகளாக வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் சிறு புள்ளிகள் முதல் பெரும் பெரும் புள்ளிகள் வரை தங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளும் அளவிற்கு தப்புகளை செய்துள்ளனர். இந்த புகாரை முதல்முதலாக வெளிப்படுத்தியது ஸ்ரீ ரெட்டி என்னும் நடிகை.

சமீபத்தில் 51 வயது நடிகர் ஒருவர் பேத்தி வயது நடிகையை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு கூப்பிடு தனது பெயரை கெடுத்துக் கொண்டுள்ளார். அந்த நடிகையும் இவருக்கு நம் அப்பா வயதுக்கு மேல் இருக்கும் என்று அவருடன் சகஜமாக பழகி இருக்கிறார். ஆனால் அந்த நடிகரோ கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இல்லாமலே இவர் மீது ஒரு வக்கிரத்துடன் தான் பழக ஆரம்பித்து இருக்கிறார்.

ஆரம்பத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சின்ன தொலைக்காட்சியில் பணியாற்றிய அந்த நடிகர் சம்பளம் குறைவாக தந்ததால், தனது திறமையை வைத்து வேறு ஒரு பெரிய தொலைக்காட்சிக்கு மாறிவிட்டார். தனக்கென உள்ள பேச்சு வழக்கில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேசி பட்டையை கிளப்புவர்.

அதற்கு ஏராளமான பெற்றோர்கள் ரசிகர்கள் பெருகவே அங்கேயும் தனது சில்மிஷ வேலையைச் காட்டியுள்ளார். அதன் சூட்டிங் செல்லும் இடத்திலும், தன்னுடன் போட்டோ எடுக்க வருபவரிடம் நம்பரை வாங்கி அங்கேயும் தனது மன்மத லீலை விளையாட்டுகளை அரங்கேற்றியிருக்கிறார். இப்போது பேத்தி வயது நடிகைக்கும் இதே தொந்தரவு கொடுத்து இருக்கிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த பேத்தி வயது நடிகைக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்து இருக்கிறதாம். அந்த நடிகையிடம் ஜொள்ளு விட்டு பேசிய இவர், உன்னை இரண்டு நாட்கள் வீட்டில் தனியாக அனுப்புவார்களா என்றும் கேட்டுள்ளார்.

அந்த தயாரிப்பாளர் கூட இரண்டு நாட்கள் தங்க வேண்டும். நீ தங்கிய பிறகு தான் உன்னுடைய எதிர்காலமே என்றும் கூறியிருக்கிறார். அதுபோக அசிங்கமாகவும் டபுள் மீனிங்கில் பேசி இருக்கிறார். எதுவும் புரியாத இளம் நடிகை அதன் பின் சுதாரித்து ஓட்டம் பிடித்து இருக்கிறார்.

- Advertisement -