ஒரு நல்ல டர்னிங் பாயிண்டுக்காக காத்திருக்கும் 5 இளம் நடிகர்கள்.. ஜெய் பீம்மோட நிற்கும் மணிகண்டன்

தமிழ் சினிமாவில் ஒரு சில ஹீரோக்கள் தங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு வந்து விடாதா என்று தவம் கிடக்கிறார்கள். நல்ல நடிப்பு திறமை இருந்தும்  சில ஹீரோக்களுக்கு சினிமாவில் பெரிய அளவில் ஒரு திருப்புமுனை ஏற்படுவதே இல்லை.

ஹரிஷ் கல்யாண்: பொறியாளன் திரைப்படம் மூலமாக ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட பிறகு தான் ரசிகர்களுக்கு இவரை அடையாளம் தெரிந்தது. அதன் பின்னர் ஒரு சில வெற்றி படங்கள் கொடுத்தாலும் இவருக்கு கோலிவுட்டில் இன்று வரை பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெயர் இல்லை.

Also Read: தூங்கு மூஞ்சி அஸ்வினை மிஞ்சும் ஹரிஷ் கல்யாண்.. சிரியாய் சிரிக்கும் கோடம்பாக்கம்

கவின்: கவின் சின்னத்திரையில் நாடகங்கள் நடிக்கும் போதே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம் உண்டு. சில வருடத்திற்கு பிறகு பிக்பாஸில் கலந்து கொண்ட போது கூட இவர் அளவுக்கு எந்த போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் இல்லை. அந்த அளவுக்கு இவருக்கு வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பின்னர் கவின் நடித்த படங்கள் எதுவும் அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

துருவ் விக்ரம்: நடிகர் சீயான் விக்ரம் தன் மகனை முதன்முதலாக சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தும்போது அவருடைய வெற்றிக்காக ஒவ்வொன்றையும் பார்த்து செய்தார் துருவ் விக்ரமும் முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர் இவருக்கு எந்த வாய்ப்புகளும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அமையவில்லை.

Also Read: சத்தமில்லாமல் காய் நகர்த்திய ஹரிஷ் கல்யாண்.. கடுப்பில் முன்னாள் காதலிகள்

ஜி.வி.பிரகாஷ்: ஒரு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றி கண்டவர் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் இவர் ஹீரோவாகவும் அறிமுகமாகினார். நல்ல நடிப்பு திறமை இருந்தும் கதைகளை தேர்ந்தெடுப்பதில் இவர் ரொம்பவே சொதப்புகிறார் என்றே சொல்லலாம். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஜெயில் திரைப்படம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இருந்தாலும் இசையமைப்பாளராக ஜெயித்த இவரால் நடிகராக இன்னும் ஜெயித்து காட்ட முடியவில்லை.

‘ஜெய் பீம்’ மணிகண்டன்: ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், மணிகண்டனுக்கு கோலிவுட்டில் அடையாளம் கொடுத்த திரைப்படம் ஜெய் பீம் தான். பழங்குடியின மக்களைப் போலவே அந்த படத்தில் வாழ்ந்து காட்டி இருந்தார் மணிகண்டன். படம் வெளியான பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவருக்கு அதன் பின்னர் எந்த வாய்ப்புகளும் இல்லை.

Also Read: ஹீரோவாக்க உசுர கொடுத்து வேல செஞ்ச 5 அப்பாக்கள்.. மகனுக்காக குருவையே எதிர்த்த விக்ரம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை