கிடப்பில் கிடக்கும் 5 இளம் நடிகர்களின் படங்கள்.. வளர முடியாமல் தவிக்கும் ஹரிஷ் கல்யாண்

5 young heroes Films Kept in shelved: தமிழ் சினிமாவில் உப்புமா படம் என்பார்கள் அதாவது சினிமா தயாரிக்க வேண்டும் என்ற ஆசையில் நானும் தயாரிப்பாளர் என்று வந்துவிடுவார்கள். இருக்கிற பணத்தை வைத்து மிக மிக கம்மியான பட்ஜெட்டில் படம் எடுப்பார்கள். சாப்பாட்டிற்கு உப்புமா மாதிரி ஏதாவது போட்டு சமாளிப்பார்கள். அந்த மாதிரி தயாரிப்பு நிறுவனங்களிடம் சிக்கி பல படங்கள் வெளி வராமல் கிடப்பில் கிடக்கின்றது.

ஜிவி பிரகாஷ்: சகட்டு மேனிக்கு படங்களை நடித்து தள்ளும் ஜிவி பிரகாசுக்கு இரண்டு முதல் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடக்கின்றது. இவர் நடித்த டீசல் மற்றும் 4g போன்ற படங்கள் ரிலீஸுக்காக காத்து இருக்கிறது.

ஹிப் ஹாப் ஆதி: 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகிறார் ஆதி. மீசையை முறுக்கு, நட்பே துணை, அன்பறிவு, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து பிடி சார் என்று ஒரு படம் இன்று வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

வளர முடியாமல் தவிக்கும் ஹரிஷ் கல்யாண்

விமல்: சர்ச்சைக்கு எப்பொழுதுமே பஞ்சமில்லாத நடிகர் விமல் . இவர் நடித்து பல படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை பணத்தட்டுப்பாட்டால் படம் பாதியிலேயே நின்று விடும். மஞ்சள் குடை என்ற படம் விமல் நடித்த இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண்: வந்த புதிதில் இளம் ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்தவர் ஹரிஷ் கல்யாண். ஏதாவது ஒரு ஹிட் கொடுத்து விட மாட்டோமா என்று சகட்டுமேனிக்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த டீசல் என்ற ஒரு படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

அதர்வா: தமிழ் நடிகர் இதயம் முரளி வாரிசான இவர் பல படங்கள் நடித்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஒரு சிறப்பான ஹிட் கொடுக்கவில்லை. இவர் நடித்த அட்ரஸ் மற்றும் டிஎன்ஏ போன்ற இரண்டு படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்