Bigg Boss 7 Wild Card Entry: விஜய் டிவியில் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசன்களிலே இப்போது ஆரம்பித்த சீசன் 7 ஒவ்வொரு நாளும் அடிதடியில் களைகட்டி வருகிறது. ஆரம்பமே சண்டையா என்று சொல்லும் அளவிற்கு முதல் நாளிலிருந்து இப்பொழுது வரை அடிதடிக்கும் பிரச்சனைக்கும் பஞ்சமே இல்லாமல் மிகவும் சுவாரசியமாக இருந்து வருகிறது.
அத்துடன் இவர்களில் யார் நல்லவர், யார் ஜெயிக்கப் போகிறார் என்று கணிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொருவருடைய விளையாட்டு யுத்தி பயங்கரமாக இருந்து வருகிறது. ஒரு வாரத்தில் இவர்கள் தான் சூப்பர் என்று நினைத்தவர்கள் அடுத்த வாரமே வெறுக்கும் அளவிற்கு அவர்களுடைய பெர்பார்மன்ஸ் இருக்கிறது.
இதுல யார வெறுத்துட்டு வந்தோமோ அவர்களுடைய கேம் சூப்பராக இருக்கிறது என்று சப்போர்ட் பண்ணும் அளவிற்கு அவர்களுடைய கன்டென்ட் பயங்கரமாக இருந்து வருகிறது. அத்துடன் இந்த முறை போட்டியாளர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் நாங்கள் கண்டெண்டுக்காக தான் இந்த மாதிரி செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டு பல வேலைகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது வரை பிரதீப், மாயா, விஷ்ணு, ஜோவிக்கா மற்றும் நிக்சன் இவர்கள்தான் டாப் 5 க்கு வருவார்கள் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது கமலஹாசன் வெளியிட்ட ப்ரோமோ படி பிக் பாஸ் நிகழ்ச்சியை தலைகீழாக புரட்டிப் போடுவதற்கு வைல்ட் கார்டு என்டரியாக 5 பேர் வரப்போகிறார்கள். அவர்கள் யார் என்றால் விஜே அர்ச்சனா, பப்லு, கானா பாலா, உமா ரியாஸ் மற்றும் ரேகா நாயர்.
ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7 ஒவ்வொரு நாளும் அடிதடி செய்து விறுவிறுப்பாக கொண்டு வருகிறார்கள். இதுல வேற வரப்போகிற இந்த ஐந்து பேர் கேம் எந்த அளவிற்கு இருக்க போகுதோ தெரியவில்லை. மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று புரிந்து கொண்டு உள்ளே போகப் போகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் உடைய கேமின் யுத்தி என்னவாக இருக்கப் போகிறது என்பதை பார்க்கவே ரொம்ப ஆவலாக இருக்கிறது.
இதுவரை இருந்த போட்டியாளர்களை விட ஒருவேளை புதிதாக வந்தவர்கள் மக்களின் ஃபேவரிட் போட்டியாளராக இடம் பிடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே விஜய் வர்மா மாதிரி ஒரு ஆளை சமாளிக்க முடியாமல் வெளியே அனுப்பிவிட்டார்கள். இதுல புதுசா வந்தவங்க வேற எப்படி இருக்க போறாங்களோ. ஆக மொத்தத்துல ஆண்டவர் மண்டை தான் உருள போகிறது.