2024 ஐபிஎல் இல் கண்காணிக்கப்படும் 5 விக்கெட் கீப்பர்கள்.. இசான் கிசானை விரட்ட வந்த புது புயல்

5 Keepers Rule IPL: 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோத உள்ளது. இந்த தொடர் எலக்சன் வருவதால் 21 நாட்களுக்கான போட்டி அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை ஏலத்தில் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. குறிப்பாக ஐந்து பேரை எடுப்பதில் காசை வாரி இறைத்தனர். குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு கடும் போட்டி நிலவியது.

ஜோஸ் இங்கிலீஷ், ஷாம் பில்லிங்ஸ், பிலிப் சால்ட் போன்ற அயல்நாட்டு வீரர்களுக்கும், ரிஷப் பந்த், துருவ் ஜுரல்,சஞ்சு சாம்சன், ஈசான் கிஷான் போன்ற இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு கடும் போட்டி நிலவியது.

இசான் கிசானை விரட்ட வந்த புது புயல்

ஒவ்வொரு அணியும் தங்களுக்குரிய பழைய விக்கெட் கீப்பர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இம்முறை புதிதாக வந்த துருவ் ஜுரல் அனைவராலும் கண்காணிக்கப்பட்டார். அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தனர்.

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஜுரல் நன்றாக ஆடியது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி டெஸ்ட் தொடரில் கே எஸ் பரத், விர்திமான் சாகா போன்றோருக்கு சரியான போட்டி கொடுக்கும் அளவில் ஜுரல் ஆட்டம் இருந்து வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் இவர் நிச்சயமாக பிசிசிஐயால் உற்று நோக்கப்படுவார். விபத்திலிருந்து உயிர் தப்பி வந்த ரிஷப் பந்த் இந்த தொடரில் விளையாடுகிறார். அவரும் இந்திய அணி கதவை தட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Sharing Is Caring:

அதிகம் படித்தவை