2024 இல் எதிர்பார்க்க முடியாத அதிர்ச்சியை தரக்கூடிய 5 விஷயங்கள்.. ரொமான்டிக் ஹீரோவாக மாறிய லோகேஷ்

Lokesh Kanagaraj : 2024 தொடங்கி மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளது. ஆனால் அதற்குள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்துள்ளது. இதில் சில நன்மையான விஷயங்கள் இருந்தாலும் சிலவற்றை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவற்றும் உள்ளது. அவை என்னென்ன என்று இப்போது பார்க்கலாம்.

அரசியலில் களம் இறங்கிய விஜய்

லியோ வெற்றியை தொடர்ந்து இப்போது கோட் படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். அதோடு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார்.

கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி

கிரிக்கெட்டில் சிஎஸ்கே என்ற அணியை கஷ்டப்பட்டு உருவாக்கிய இருந்தார் தோனி. அதில் கேப்டன் பதவி தோனி வகித்து வந்த நிலையில் இந்த வருடம் விலகி விட்டார். அவருக்கு பதிலாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு 27 வயது நிரம்பிய ருத்ராஜ் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ்

இசைஞானி இளையராஜாவின் பயோபிக் எடுப்பதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் அதில் தனுஷ் இளையராஜாவாக நடிப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. இளையராஜாவின் பயோபிக் படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

ரொமான்டிக் ஹீரோவாக மாறிய லோகேஷ்

லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளனர். இதற்கு கமலஹாசன் பாடல் வரிகள் எழுதி உள்ள நிலையில் ஸ்ருதிஹாசன் இசையமைத்திருக்கிறார். இந்த பாடல் வரும் 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று ப்ரோமோ வெளியானது.

படத்திலேயே ரொமான்ஸ் காட்சி வைக்காத லோகேஷ் இந்த பாடலில் ஸ்ருதிஹாசன் உடன் படு நெருக்கமாக நடித்திருந்தார். இது இயக்குனர் லோகேஷா? என பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. மேலும் டீசரை இப்படி இருந்தால் பாடல் எப்படி இருக்கும் என்று ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

காலியாகும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் இப்போது முக்கிய நடிகர்களாக பார்க்கப்படுவது விஜய் மற்றும் அஜித் தான். விஜய் இப்போது அரசியல் கட்சி தொடங்கி உள்ளதால் சினிமாவில் அதிக கவனம் செலுத்தாமல் இருக்கிறார். அதேபோல் அஜித்தும் இப்போது பைக் ரேஸ் மற்றும் அதற்கான பயிற்சி அளிப்பது என ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆகையால் இனி வரும் காலங்களில் விஜய், அஜித் இருவருமே படங்களில் நடிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். இதனால் தமிழ் சினிமாவின் நிலைமை என்னாகும் என்ற கேள்விக்குறி உள்ளது.

Next Story

- Advertisement -