கிரிக்கெட்டில் நம்பமுடியாத 5 சாதனைகள்.. அடிச்சிக்கவே முடியாத சௌரவ் கங்குலி ரெக்கார்டு

இன்றுவரை கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகள் நடைபெற்றுள்ளது . அவற்றுள் நம்ப முடியாத சாதனைகளும் பல அடங்கும். அந்தவகையில் நாம் இதுவரை அறியாத மற்றும் நம்பமுடியாத சாதனைகளை இதில் காண்போம்

ஸ்ரீலங்கா: இதுவரை நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு முறை மட்டுமே இலங்கை அணி,ஆஸ்திரேலிய அணியை வென்றுள்ளது. 1993ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதுவே இலங்கை அணி, ஆஸ்திரேலியாவை ஜெயித்த முதல் மற்றும் கடைசி போட்டி.

சனத் ஜெயசூரியா: ஷேன் வார்னேவை விட சனத் ஜெயசூர்யா அதிக விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். ஷேன் வார்னே 293 விக்கெட்டுகளையும், சனத் ஜெயசூரியா 323 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் எடுத்துள்ளனர்.

sanath-Warne
sanath-Warne

விராட் கோலி: விராட் கோலி வருகைக்கு பின் இந்திய அணி ஐந்து முறை 300 பிளஸ் டார்கெட்டை வென்று அசத்தியுள்ளது. அந்த ஐந்து போட்டிகளிலும், விராட் கோலி நான்கு போட்டிகளில் சதம் அடித்துள்ளார்.

Virat
Virat

மகிளா ஜெயவர்தனே: உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதி போட்டியிலும், இறுதிப் போட்டியிலும் சதம் அடித்த ஒரே வீரர் இலங்கையைச் சேர்ந்த ஜெயவர்தனா மட்டும்தான்.

சௌரவ் கங்குலி: சௌரவ் கங்குலி ஒருநாள் போட்டிகளில் நான்கு முறை தொடர்ந்து “மேன் ஆப் தி மேட்ச்” டைட்டிலை வென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்