டைம் ட்ராவலை மையப்படுத்தி வந்த 5 படங்கள்.. சயின்ஸ் பிக்சனிலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த இன்று நேற்று நாளை

Time Travel Tamil Movies: சயின்ஸ் பிக்சன் படங்களுக்கு எப்பொழுதுமே சினிமா ரசிகர்களிடம் அதிக ஆதரவு இருக்கும். அதிலும் டைம் டிராவல் பற்றிய கதைகள் என்றால் அது எந்த மொழி படங்களாக இருந்தாலும் தேடிச் சென்று பார்த்து விடுவார்கள். அப்படி தமிழிலும் ஐந்து டைம் டிராவல் கதைகள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன. இது போன்ற படங்களுக்கு ரசிகர்களிடமும் அதிக ஆதரவு கிடைத்திருக்கிறது.

இன்று நேற்று நாளை: விஷ்ணு விஷால் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான படம் இன்று நேற்று நாளை. இந்த படத்தில் டைம் டிராவல் மெஷின் கிடைத்த இரண்டு நண்பர்கள் அதை வைத்து எப்படி எல்லாம் சம்பாதிக்க முடியும் என்பதை முயற்சி செய்து பார்க்கும் கதைக்களம். இந்த படம் முழுக்க வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவுக்கு நகைச்சுவை காட்சிகளும் இருந்தது. இந்த படத்தை இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

Also Read:சிறைச்சாலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 5 படங்கள்.. லாக்கப் மரணத்தை கண் முன் காட்டிய ஜெய் பீம்

24: சூர்யா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான 24 படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கியிருந்தார். டைம் டிராவல் மெஷினை வாட்சில் செட் பண்ணி வைக்கும் அறிவியல் விஞ்ஞானியாக சூர்யா இதில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு மூன்று கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். படம் ரொம்பவும் அதிரடியாகவும் அதே நேரத்தில் ஜாலியாகவும் செல்லும்.

டிக்கிலோனா: நடிகர் சந்தானம் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிக்கிலோனா. டைம் டிராவல் மெஷின் கதையிலேயே முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்ட படம் இது. தன் வாழ்க்கை சந்தோஷமாக இல்லாததால் கிடைத்த டைம் டிராவல் மெஷினை வைத்து பின்னோக்கி சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள திட்டமிடும் கதாநாயகனின் கதை தான் இது.

Also Read:உண்மை கதைக்காக வெற்றிகண்ட 5 படங்கள்.. சூர்யாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த படம்

ஜாங்கோ: இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ் மற்றும் மிருநாளினி ரவி நடித்த திரைப்படம் தான் ஜாங்கோ. இந்த படம் கிடைக்கும் டைம் டிராவல் மெஷினை வைத்து தன் மனைவியை மரணத்திலிருந்து காப்பாற்ற நினைக்கும் திரைக்களத்தை கொண்டது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

மாநாடு: நடிகர் சிலம்பரசனுக்கு மிகப்பெரிய திருப்புமுனை கொடுத்த திரைப்படம் மாநாடு. டைம் லூப் என்னும் சயின்ஸ் பிக்சன் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது எஸ் ஜே சூர்யாவின் வில்லத்தனமான நடிப்பும் தான். சயின்ஸ் பிக்சன் கதையை இப்படி ஒரு வித்தியாசமான திரை களத்தில் சொல்லி வெற்றி பெற்றார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Also Read:நல்ல திறமை இருந்தும் வாயால் அழிந்த 5 இளம் நடிகர்கள்.. 2 கோடிக்கு வலை விரிக்கும் ஜெய் பீம் மணிகண்டன்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்